புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 30, 2019)

எங்கள் அடைக்கலமானவர்

சங்கீதம் 46:1

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூ லமான துணையுமானவர்.


அங்குமிங்குமாய் ஓடி விiயாடும் குழந்தை, வெளி முற்றத்திலே விளை யாடிக் கொண்டிருந்தது. குறித்த அந்த வேலிப்பக்கமாக போக வேண் டாம் என்று தந்தை பலமுறை கூறியிருந்தும், அன்றைய நாளிலே, குறி த்த அந்த பக்கமாக செல்ல முயன்ற போது, காலில் முள் குத்திவிட் டது. இந்த வேளையிலே அந்த குழந்தைக்கு இன்னுமொரு அடி எடு த்து வைக்க முடியவில்லை. வீறிட்டு அழு தபடி தன் கரங்களை தன் தந்தையை நோக்கி தூக்கியது. தந்தையும் விரைந்து சென்று, தன் பிள்ளையை தூக்கி தேற்றிய பின்பு, அந்த சிறிய முள்ளை காலிருந்து மிகவும் கவன மாக எடுத்து விட்டார். இந்த பூமி யிலே நாங்கள் வாழும் நாட்களிலே, எத்தனை முறை எங்கள் பரம தந்தை யாகிய தேவனுடைய வார்த்தையை கேளாமல் போனோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்! அதன் விளை வாக, எங்கள் வாழ்க்கையில் ஆபத்தும், பெலவீனமும், சோர்வும் உண்டாகி விடுகின்றது. நாங்கள் தேவனுடைய சொல்லுக்கு கீழ்ப்ப டியாதது உண்மை. ஆனால் எங்கே ஓட முடியும்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட் டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங் கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலது கரம் என்னைப் பிடிக்கும் என்று தேவ பக்தனாகிய தாவீது ராஜா கூறினார். ஆம்! தேவனை விட்டு நாங்கள் எங்கும் போகமுடியாது. நாங்கள் குற்றம் செய்து விட்டோம் என்று அவருக்கு ஒழிந்து கொள்ள முடியாது. அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. அதைவிட அதிகமாக, நாங்கள் வேறு எங்கும் சென்று நிம்மதியை அடைந்து கொள்ள முடியாது. திக்கற்றிருக்கும் போது அவரே எங்கள் அடை க்கலம். எங்கள் ஆபத்து காலத்தில் அவரே எங்களை ஆதரிக்கும் துணை. எங்கள் பெலவீன நேரங்களில் அவரே எங்களது பெலன். எனவே எப்படியாக சிறு குழந்தை, இக்கட்டான சூழ்நிலையில், தன் கரங் களை விரித்து தன் தந்தையை நோக்கிப் பார்த்ததோ, அதே பிரகாரமாக, நாங்களும் எங்கள் இக்கட்டான நேரங்களில் எங்கள் அன்புள்ள பரம தந்தையை நோக்கிக் கூப்பிடுவோம்.

ஜெபம்:

அடைக்கலமான பரம தந்தையே, பயங்கரங்கள் சூழும் வேளை யிலே உம்மைவிட்டு தூரம் போகாமல் உம்மை அண்டிச் சேரும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:68-69