புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 29, 2019)

ஆதரவற்றவர்களை ஆதரியுங்கள்

யாத்திராகமம் 22:22

விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;


ஒரு ராஜ்யத்திலே வறட்சி ஏற்பட்டிருந்ததால், உணவுப் பண்டங்களுக்கு தட்டுப்பாடு உண்டாயிற்று. அரச இலாகா ஒன்றிலே, ஜனங்களுக்கு தானியம் வழங்கப்படுகின்றது என்று அறிந்த ஊரிலுள்ள ஏழைக் குடி கள் அதிகாலையிலிருநது வரிசையில் நின்றார்கள். பல நாட்களாக தங் கள் பிள்ளைகளுக்கு ஒழுங்கான ஆகா ரம் இல்லாததினால் எப்படியாவது தங் கள் பிள்ளைகளை போ~pக்க வேண் டும் என்று கவலையடைந்திருந்தார்கள். காலையிலே பண்டகசாலைகள் திறக் கப்பட்டு, தானியம் வழங்கப்படும் நேர த்தில், அதிகாரத்திலுள்ள மந்திரிகளு க்கு அறிமுகமானவர்கள் என்று, வரிசையில் நிற்காத அநேகர் உள்ளே சென்று தானியங்களை எடுத்துச் சென்றார்கள். அதனால் அநேக ஏழைகள் தானியங்கள் இன்றி பசியோடு வீடு சென்றார்கள். கருப் பொருளாவது, இந்த உலகிலே ஏழைகளுக்கு ஏற்படும் ஒடுக்கு முறைக ளில் சில வேளைகளிலே எங்களை அறியாமலே பல வழிகளில் நாங்களும் உடந்தையாகி விடும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. அநா தைகளையும், வாழ்விழந்திருக்கும் விதவைளையும் விசாரித்து, அவர்க ளுக்கு ஆதரவாக இருப்பதில் தேவன் பிரியப்படுகின்றார் என்பதை குறித்து நாங்கள் தியானித்தோம். அதே நேரத்திலே, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக என்று தேவ னாகிய கர்த்தர் கூறியிருக்கின்றார். அவர்களை எவ்வளவாகிலும் ஒடு க்கும் போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, கோபமூண்டவராகி, அவர்களை ஒடுக்கின்றவர்களுக்கு கடும் தண்டனையை வழங்குவேன் என்றும் தேவன் கூறியிருக்கின்றார். திக்கற்றவர்களையும் விதவைகளை யும் நேரடியாக ஒடுக்குவதற்கு நாங்கள் அநியாயம் உள்ளவர்கள் அல்லர் என்று நாங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த கட் டளையானது தேவனுடைய ஜனங்களுக்கே கொடுக்கப்பட்டது. அநாதர வானவர்கள் முன்குறித்தபடி தங்கள் கடனை அடைக்க நிர்வாகம் இல்லாதிருந்தால், அவர்களை மன்னித்து விடுங்கள் அல்லது அவர்கள் கேட்கும் கால அவகாசத்தைக் கொடுங்கள். வார்த்;தைகளினாலோ கிரி யைகளினாலோ அவர்கள் மனதைப் புண்படுத்தாதிருங்கள். உங்கள் சகோதரரில் ஒருவரைப் போல அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கனத்தைக் கொடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:

ஏழைகளை ஆதரிக்கும் தேவனே, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எனது சொல்லாலும், நடக்கையாலும் ஆதரவற்றவர்களுக்கு அநீதி செய்யாதபடிக்கு அவர்களை ஆதரிக்கும்படி என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரேமியா 22:3