புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 28, 2019)

பொய் உதடுகள்

நீதிமொழிகள் 12:22

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.


உண்மையைப் பேசினால் எனக்கு தண்டனை கிடைக்கும் எனவே பொய் சொல்லி விடுவோம் என்று ஒரு மாணவன் தன் இருதயத் திலே சொல்லிக் கொண்டான். சில வேளைகளிலே இப்படிப்பட்ட செயல்கள்; பெரிய பாரதூரமான குற்றச் செயல் போல மனித ர்களுக்கு தோன்றுவதில்லை. சிறிய விதை வளர்ந்து எப்படி பெரிய விருட்சமாகின்றதோ, அதே போலவே, நாங்கள் எங்கள் வாழ்க்கையில் செய் யும் நன்மை தீமைகளும் ஒரு நாள் வளர்ந்து பெருகி, அதன் கனியைக் கொடுக்கும். பொய் பேசுகின்ற இருத யத்திலே மனந்திரும்புதலுக்கு இடமி ல்லை. பிசாசானவனிடத்தில் உண்மை இல்லை. அவன் பொய்யனும் பொய் க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான் என்று இயேசு கூறியிருக்கின்றார். அதாவது, சத் தியம் (உண்மை) இயேசுவிலே நிலைத்திருக்கின்றது. அவரிலே நிலை த்திருக்கின்றவர்கள் சத்தியத்திலே நிலைத்திருக்கின்றபடியால், பொய் பேசுதல் அவர்கள் வாழ்க்கையில் இருப்பதில்லை. பொய் பேசும் சுபாவம் பிசாசானவனுக்குரியது. அதை தேவன் வெறுக்கின்றார். ஏனெ னில், அந்த சுபாவம் எங்கள் வாழ்க்கையை அழித்துப் போடும். சில வேளைகளிலே முகவர்கள், தங்களுடைய வியாபாரம் வெற்றியடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, பொய்யை பேசாவிடினும் உண்மையைக் கூறுவதில்லை அல்லது உண்மையை மறைத்து விடுகி ன்றார்கள். முதல் முறை இப்படியாக செய்யும் போது மனதிலே குற்ற உணர்வு உண்டாகும், அதிலிருந்து மனந்திருப்பாத விடத்து, நாள டைவில் அந்த குற்ற உணர்வானது இருதயத்தை விட்டு அகன்று இரு தயம் கடினப்பட்டு போய்விடும். இது எங்கள் நாளாந்த வாழ்க்கையில் ஒரு உதாரணம். எந்த ஒரு நற்கிரியையும் முதலில் கடினமாகவே தோன் றும் ஆனால் அந்த நற்கிரியைகளால் மனதில் உண்டாகும் சந்தோ~ த்தை வர்ணிக்க முடியாது. எனவே இந்த உலகிலே ந~;டம் ஏற்பட்டா லும், தேவனுக்கு முன்பாக நாங்கள் உண்மையுள் ளவர்களாக இருப் பதே எங்களுடைய ஆத்துமாவிற்கு நலமானது. பொய் உதடுகள் தேவ னுக்கு அருவருப்பானவைகள். எனவே அவருடைய பிள்ளைகளாகிய நாங்கள் உண்மை வழியிலே நடப்போம்.

ஜெபம்:

சத்தியமுள்ள தேவனே, சிறிய காரியம் என்று கூறி பொய் பேச பழகிக் கொள்ளாமல், எப்போதும் உமக்கு முன்பாக நான் உண்மையுள்ள வாழ்க்கை வாழ எனக்கு அருள் புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 8:43-44