தியானம் (ஐப்பசி 27, 2019)
பெருமையை விட்டுவிடுவோம்
யாக்கோபு 4:6
ஆதலால் தேவன் பெரு மையுள்ளவர்களுக்கு எதி ர்த்து நிற்கிறார், தாழ் மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென் று சொல்லியிருக்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நான் சாந்தமும் மனத் தாழ்மையு மாயிருக்கின்றேன். என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி னார். பெருமை பிசாசின் குணாதிசயம். மாயமற்ற தாழ்மை தெய்வீக சுபாவம். எனவே மனத் தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள் என்று வேதத்திலே அறிவுரை கூறப்பட்டிருக்கின்றது. இந்த உலகத்தினால் உண்டாகும் பணம், கல்வி, அந்தஸ்து போன்றவைகளால் மனிதர்களுடைய இருதயத்திலே பெருமை குடிகொண்டு விடுகின்றது. சில வேளைகளிலே, ஒன் றுமில்லாதிருக்கின்றவர்களின் இருதய த்திலும் காரணமின்றி பெருமை தலை தூக்கிவிடுகின்றது. இவையெல்லாவற் றுக்கும் மேலாக, தேவனை அறிந்தவ ர்களின் மனதில் உண்டாகும் “நான் அவனை விட பரிசுத்தன்” என்பது அதிக கேடுள்ளதாக இருக்கின்றது. ஏனெனில், உலகத்திலுள்ளவர்கள் மெய்யான தேவனை அறியாததினாலே பெருமை கொள்கின்றார்கள். ஆனால் தேவனை அறிந்த அவருடைய பிள்ளைக ளின், பெருமை தேவனுக்குரியதல்ல என்று அறிந்த பின்பும், அவர் கள் மனதில் பெருமை குடி கொள்ளுமென்றால், காலப்போக்கில் அவர்கள் இருதயம் உணர்வற்று போவதால், இனி யாரிடம் இருந்து விடுதலையை பெற்றுக் கொள்ள முடியும்? இவ்வண்ணமாகவே பரி சேயர் என்ற பிரிவைச் சேர்ந்த மனிதனும், பாவியான மனிதன் ஒரு வனும் ஜெபம் செய்ய சென்றிருந்தார்கள். பரிசேயன் ஆலயத்திற்கு தவறாமல் சென்று வந்தான், உபவாசித்தான், காணிக்கைகளை கொடு த்து வந்தான், ஆனாலும் நான் இந்த பாவியாகிய மனிதனை போலி ல்லை என்று தன் இருதயத்திலே பெருமை கொண்டிருந்ததால் அவ னுடைய ஜெபத்தை தேவன் கேட்கவில்லை. பிசா சானவன் அழிக் கவும் கொல்லவுமே வருகின்றான். அதனால் அவனு டைய சுபாவம் எங்களுக்குள் வரும் போது அழிவு சமீபமாக இருக் கின்றது என்று அறிந்து கொள்ளலாம். அழிவுக்கு முன்னானது அக ந்தை விழுதலு க்கு முன்னானது மனமேட்டிமை. எனவே, பரம பிதா அருவருக்கினற இந்த பொல்லாத சுபாவமாகிய பெருமையை எங்களை விட்டு அக ற்றி, தாழ்மையை அணிந்து கொள்ளுவோம்.
ஜெபம்:
பரலோக தேவனே, என்னுள்ளத்தில் எந்த விதத்திலும் பெரு மையை கொண்டிராதபடிக்கு, இயேசுவைப் போல மனத்தாழ்மையை அணிந்து கொள்ள என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதிமொழிகள் 16:18