புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 26, 2019)

தேவன் தங்கும் ஆலயம்

1 கொரிந்தியர் 3:16

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?


எசேக்கியல் என்னுத் தீர்க்கதரிசியின் நாட்களிலே, தேவனுடைய ஆல யத்திற்குள் அவருடைய ஜனங்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை தேவன் எசேக்கியலுக்கு காண்பித்தார். எசேக்கியலைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன். அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது. அவர் என்னை ப்பார்த்து: நீ உள்ளே போய், அவர் கள் இங்கே செய்கிற கொடிய அருவ ருப்புகளைப் பார் என்றார். நான் உள்ளே போய்ப் பார்த்த போது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ர வேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன. அதாவது, வெளியிலே ஆலயம் போல தெரிந்தாலும், தேவன் உள்ளே என்ன நடக்கின்றதென்பதை அறிவார். அது போலவே, மனிதன் எங்களுடைய முகத்தைப் பார்க்கின்றான், ஆனால் தேவனோ மனித னுக்குள், அவனுடைய இருதயத்தின் ஆழத்தில் என்ன இருக்கின்ற தென்பதை ஆராய்ந்து அறிகின்றார். அவர் எங்கள் ஒவ்வொருவரு டைய இருதயத்தின் தியானங்களை அறிந்திருக்கின்றார். “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இரு க்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள் ளப்பட்டீர்களே, ஆகையால் தேவனின் உடமைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்து ங்கள் என்று தேவ ஊழியராகிய பவுல், சபையோருக்கு புத்தி சொல் கின்றார். இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய் ச்சாட்சிகளும், தூ~ணங்களும் புறப்பட்டு வரும் என்று இயேசு கூறி யிருக்கின்றார். எனவே தேவன் தங்கும் ஆலயமாகிய எங்களின் உள்ளந்திரியங்களை பரிசுத்தமாக தேவனுக்கு ஏற்ற இடமாக பேணிப் பாதுகாக்க வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, உமக்கு வேதனை உண்டாக்கும் வழிகள் என்னிடத்திலிருந்தால், அவைகளை எனக்கு உணர்த்தி, அதிலிருந்து விடுதலையடையும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எசேக்கியேல் 8:9-18