புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 25, 2019)

மாசில்லாத சுத்தமான பக்தி

யாக்கோபு 1:27

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர் களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாத படிக்குத் தன்னைக்காத் துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக் கிறது.


ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. நீஙகள் உங்கள் நற்கிரியைகள் வழியாக அநாதரவாக இருக்கும் பிள்ளைகள் மற்றும் விதவைகளுக்கு தயவை காண்பித்து வரு கின்றவர்களாக இருந்தால், பரமபிதா உங்களில் பிரியமாக இருக்கி ன்றார் என்பதை அறிந்து கொள்ளுங் கள். உற்சாகத்தோடு இன்னும் அதிக மாக செய்யுங்கள். பரலோகிலே உங் கள் கைமாறு மிகவும் அதிகமாக இரு க்கும். பொதுவாக மனிதர்கள் ஆதரவ ற்றிருக்கும் அநாதைகள் மற்றும் வாழ் விழந்திருக்கும் விதவைகளை காணும் போது தங்கள் மனதுருக்கத்தைக் காண் பிக்கின்றார்கள். ஆனால் அந்த வேளை யோடு அநேகருடைய மனதுருக்கம்; களைந்து போய்விடுகின்றது. நாங்கள் அவர்கள் தேவைகளை சந்திக்க வேண் டும். எங்களால் முடிந்த அளவு, எங் கள் பெலத்தின்படி மன உற்சாகத் தோடு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எங்களுடைய குடும்பம் நிறைவு அடைந்து மிகையாக இருந் தால் மாத்திரம் நான் உதவி செய் வேன் என்பது தேவ பிள்ளைகளுக்குரிய பண்பு அல்ல. ஒரு வேளை எங்கள் வாழ்வின் சில சுகபோகங்களை ஒறுக்க வேண்டியதாக இரு ந்தாலும், நாங்கள் அவர்களை மறந்து போய்விடக்கூடாது. சில வேளைகளிலே சில மனிதர்கள் சம்பூரணமான ஏழைகளை தேடுகின் றார்கள். அவர்களுடைய வாழ்க்கையிலே, எல்லா காரியங்களும் தாங் கள் நினைத்த பிரகாரமாக இருந்தால் மாத்திரமே உதவி செய்வோம் என்கின்றார்கள். எங்களில் குறைவுகள் இன்னும் இருக்கும் போது, நாங்கள் எப்படி நிறைவுள்ள ஏழைகளை தேட முடியும். பிரியமான வர்களே, அநாதைகளையும் விதவைகளையும் தாங்குங்கள். உங்கள் ஆத்துமா இந்த உலகத்தால் கறைபடாதபடி காத்துக் கொள்ளுங்கள். இவைகளில் பரம பிதா பிரியமாக இருக்கின்றார்.

ஜெபம்:

மனதுருக்கமுள்ள தேவனே, எங்கள் தேசத்தில், எங்கள் மத்தியில் ஆதரவற்றிக்கும் ஜனங்களின் தேவைகளில், மன உற்சாகத்தோடு உதவி செய்யும் உள்ளத்தை எனக்குத் தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 19:17