புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 24, 2019)

இரக்கத்தை காண்பியுங்கள்

லூக்கா 6:37

விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.


கர்த்தராகிய இயேசு இந்த பூமியிலே இருந்த நாட்களிலே, தம்மு டைய ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல அலைகின்றா ர்கள் என்று கூறினார். ஜனங்கள் பாவத்தின் பிடியில் சிக்கி உழன்று கொண்டிருந்தார்கள், ஆனால் அதிலிருந்து வெளியாவதற்கு வழி தெரியாமல் இருந்தார்கள். சிலர் தாங்கள் பாவத்திலே சிக்கியிரு க்கின்றோம் என்று அறிந்து, தங்கள் நிலையை ஏற்றுக் கொண்டு, தங்களை கர்த்தர் முன்னிலையில் தாழ்த்தினார் கள். ஆனால், இன்னுமொரு சாரார், தங்களை நீதிமான்கள் என்று எப் போதும் சொல்லிக் கொண்டார்கள். இதனால், அவர்கள் மற்றய மனிதர் களை குற்றவாளிகளென்று தீர்ப்பதி லும், ஆக்கினைத் தீர்ப்பு வழங்குவதி லும் முந்திக் கொண்டார்கள். ஆனால், இயேசுவோ, இந்த இரண்டு சாராரும் பாதாளத்தில் அழிந்து போவதை விரும்பவில்லை. நான் உன் க~;டத்தில் உதவினேன், எனவே நீ என் தேவையில் உதவ வேண்டும், நான் உன் குற்றத்தை மன்னித்தேன் எனவே நீயும் என் குற்றங்களை மன்னிக்க வேண்டும். நான் உன்னை விடுதலை பண் ணினேன், நீயும் என்னை விடுதலை பண்ண வேண்டும். இல்லாவிடில் எனக்கும் உனக்கும் இடையில் உடன்படிக்கை இல்லை என்ற பிரகா ரமாக மனிதர்கள் எதிர்பார்ப்போடு கடன் கொடுத்தார்கள். மற்றவர்கள் தப்பிதங்களை மன்னித்தார்கள், விடுதலை பண்ணினார்கள். நாங்கள் இப்படியாக எதிர்பார்ப்போடு நன்மை செய்யும்படிக்காய் தேவன் விரு ம்பவில்லை. கைமாறு கருதாமல், குற்றப் படுத்தாமல், நியாயந்தீர்க் காமல், நாங்கள் மனிதர்களுக்கு பாவத்திலிருந்து விடுதலையடையும் வழியை காண்பிக்கும்படியாய் தேவன் விரும்புகின்றார். நியாயத் தீர்ப்பு நாளிலே இரக்கம் மேன்மைபாரட்டும். (யாக்கோபு 2:13). இந்த உலகிலே மனிதர்களை குற்றப்படுத்தி நியாயந்தீர்க்க அநேகர் இருக்கி ன்றார்கள். ஆதலால், ஜனங்கள் அழிந்து போகாமல், விடுதலைய டையும் வழியை காண்பிக்கும்படிக்கு என்னையும் உங்களையும் ஏற்ப டுத்தியிருக்கின்றார்கள். எனவே எங்களை சூழ்ந்து இருக்கின்றவர்கள் தவறும் போது, வழி விலகிச் செல்லும் போது, அவர்கள் விடுதலை யடைய வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக நாங்கள் இருப்ப தையே தேவன் விரும்புகின்றார்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, பாவ உளையிலே சிக்கித் தவிக்கும் மனிதர்களுக்கு விடுதலையடையும் வழியை காண்பிக்கும் உம்முடைய பிரியமுள்ள பிள்ளையாக வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:7