புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 23, 2019)

ஜெபிக்கும் பிள்ளைகள்

லூக்கா 6:28

உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.


உங்கள் உடன் சகோதரர் ஒருவர் உங்கள் மனதைப் புண்படுத்தி, உங்களை அவமானப்படுத்தும் நிந்தையான பேச்சுக்களை பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அது உங்களை குறித்த காரியமாக இருக் கலாம், அல்லது உங்கள் பிள்ளைகளைக் குறித்ததான காரியங்களாக இருக்கலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள்! “உங்களை நிந்திக்கிறவர்க ளுக்காக ஜெபம்பண்ண வேண்டும் என் பதே தேவனாகிய கர்த்தருடைய விரு ப்பம். ஆனால் அவர்களை சபித்துவிட த்தான் மனம் வருகின்றதே தவிர எப் படி அவர்களுக்காக ஜெபிக்க முடி யும்? ஆம், அது உண்மையிலே மிக வும் கடினமான காரியம். சைக்கிள் ஓட் டுவதற்கு எனக்கு ஆசையாக இருக்கி ன்றது, எனக்கு பழக்கித் தாருங்கள் அப்பா என்று ஒரு சின்ன பையன் தன் தந்தையிடம் கேட்டான். தாமதமேதுமின்று அடுத்த நாளே, தன் மகனுக்கு சைக்கிள் பழக்க ஆரம்பித்தார். முதல் கிழமையில், சில தடவைகள் தவறி விழுந்ததும், சின்ன மகனுக்கு மனதில் பயம் பிடித்து விட்டது. “நான் ஒரு போதும் சைக்கிள் ஓடப் போவதில்லை” “இது மிகவும் கடினமான காரியம்” என்று திட்டமாக தன் தந்தையிடம் கூறிவிட்டான். தந்தை அவனை நோக்கி: பொறுமையாக இரு மகனே, நானும் இப்படித்தான் சைக்கிள் பழகினேன் என்றார். சில கிழமைகளு க்கு பின், சின்ன மகனின் மனதில் பெரும் பரவசம், தந்தையின் துணையின்றி தன்பாட்டிற்கே சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தான். இப் போது சைக்கிள் ஓட்டுவதற்கு பயம் ஏதும் இல்லை. இப்போது சைக்கிள் ஓட்டுவது உல்லாச பயணமாக மாறிவிட்டது. ஆம் பிரிய மானவர்களே, எந்த ஒரு காரியமும் முதலில் கடினமாகத்தான் தோன் றும். என்னை நிந்திக்கின்றவனுக்கு பதிலடி கொடுக்காவிட்டால் என்னை குற்றவாளி என்று மற்றவர்கள் கணித்து விடுவார்கள் என்ற பயம் மனதை ஆட்கொண்டு விடும். துணை செய்கின்ற ஆவியானவர் எங்க ளோடு இருக்கின்றார். ஒருமுறை உங்களை நிந்திக்கின்றவர்களுக் காக ஜெபித்துப் பாருங்கள். என்றுமில்லாத புத்துணர்சி மனதில் தோன் றும். சில தடவைகள் அப்படி செய்தால் பின்பு, அது உங்கள் சுபாவ மாக மாறி விடும். நீங்கள் ஞானவான்களாக இருப்பீர்கள். பிதாவாகிய தேவன் உங்களில் பிரியப்படுவார்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, என்னை நிந்தித்து அவமதிக்கின்றவர்களை சபிக்காமல், அவர்களுக்காக ஜெபிக்கும்படியாக எனக்கு கற்றுத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபி க்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:17