புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 22, 2019)

இயேசு மீண்டும் வருவார்

1 கொரிந்தியர் 16:13

விழித்திருங்கள்,விசுவாசத்திலே நிலைத்திருங்கள்.


நீங்களெல்லாரும் தேவனாகிய கர்த்தரின் வெளிச்சத்தின் பிள்ளைக ளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்;. நீங்கள் வஞ்சிக்கும் சாத் தானின் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். அதாவது எங்கள் ஆவிக்குரிய வாழ்வில் எப்போதும் நாங்கள் விழிப் புள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆத்துமா எப்போதும் தேவனை நோக்கி காத்திருக்க வேண்டும். கர்த் தராகிய இயேசு தாமே அவர் வான த்துக்கு எடுத்துக் கொள்ளப் போகிற போது, அவருடைய சீஷர்கள் வான த்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மை யான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபா ர்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ள ப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். ஆம்! நிச்சயமாக வருவார் என்று, விசுவாசத்திலே தளர்ந்து போகாமல், எங்கள் நற்கிரியைகளிலே சோர்ந்து போகாமல், எங்கள் ஜீவ ஓட்டத்தில் இளைப்படைந்து போகாமல், அவர் வெளி ப்படும் போது, கறைதிரை அற்றவர்களாக இருக்கும்படிக்கு தொட ர்ந்து முன்னேறுவோம். திருடன் இன்ன ஜாமத்தில் வருவான் என்று தெரியாதது போல, கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். எனவே, பாவத்திற்கு உட்படாமல், தூய ஆவியானவரின் துணையோடு ஒரு போதும் எங்கள் விளக்கானது அணைந்து போகாதபடி ஆயத்தமாக இரு க்க வேண்டும். இந்த உலகிலே, உங்கள் சுற்றாடலிலே நடக்கும் தீங் கான காரியங்களைக் கண்டு மருண்டு போகாதிருங்கள். “உங்கள் இரு தயம் கலங்காதிருப்பதாக தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னி டத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாச ஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல் லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.” என்று இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

வாக்கு மாறாத தேவனே, இந்த உலகத்தில் நடக்கும் கேடுக ளினால் சோர்ந்து போகாமல் உம் வார்;த்தையில் நிலைத்திருக்கும்படி, தூய ஆவியின் பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:1-13