புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 21, 2019)

பிதாவின் சித்தம் செய்வோம்

எபேசியர் 5:17

ஆகையால், நீங்கள் மதி யற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்.


எப்படி நாட்களை ஞானமாய்ப் பிரயோஜனப்படுத்திக் கொள்வது? முதலாவதாக எங்கள் இருதயத்தை நாங்கள் காத்துக் கொள்ளும்படி க்கு தேவனுடைய தூய்மையான சத்திய வேதத்தை கற்றுக் கொள்ள வேண்டும். பிதாவாகிய தேவனுக்கு பிரியமானதை, அவருடைய விருப்பத்தை, அவருடைய சித்தத்தை எங்கள் வாழ்;க்கையில் நாங்கள் செய்ய வேண்டும். அவை என்ன என்பது பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. எனவே பரிசுத்த வேதாகமத்தை வாசி யுங்கள். இன்று அதிகதிகமான வேதம் சார்ந்த புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. உங்கள் ஆவிக் குரிய வாழ்க்கையின் வளர்ச்சியை அந்த புத்தகங்களிலும், இன்நெற் ஊடகங்க ;டாக வரும் செய்திகளிலும் வைக் காதிருங்கள். ஒரு வேளை “உள்ளான மனிதன்” சஞ்சிகையை ஒரு துணைப் புத்தகமாக நீங்கள் வாசித்து வரலாம், ஆனால் பரிசுத்த வேதாகமத்தை நீங்கள் நேரடியாக வாசித்து விளக்கங்களை அறிந்து கொள்ளும் அளவிற்கு வளர வேண்டும்;. பரிசுத்த வேதாகமத்தை அதிக திகமாக வாசியுங்கள். திரும்பத் திரும்ப வாசியுங்கள். ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள். வெற்றி வாழ்க்கைக்கு ஜெபம் இன்றியமை யாதது. தூய ஆவியானவர் நிச்சயமாக ஞானத்தை தந்து தூய்மையான சத் தியத்தை கற்றுக் கொடுப்பார். கற்றவைகளை உங்கள் வாழ் க்கையில் நடைமுறைப்படுத்துங்கள். உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக் கப்பட வேண்டும். நீங்கள் கற்ற தூய்மையான சத்திய வேதத்தை உங் கள் பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே முறைப்படி கற்றுக் கொடு ங்கள். நீங்கள் அறிந்தவர்களுக்கும் உங்களால் முடிந்த அளவிற்கு மாசில்லாத வேதத்தை கற்றுக் கொடுங்கள். ஒரு சபையிலே அங்கத்தவராக இருக்கப் போகின்றேன் என்று முடிவு எடு த்த பின்பு, அந்த சபையின் சபைகூடிவருதலை விட்டுவிடாதிருங்கள். உங்கள் சபையில் ஞாயிற்றுக் கிழமைகளில் போதிக்கப்படும் தேவ செய்தியை கவனமாக கேட்டு, தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படியுங்கள். அடுத்த சில தினங்களுக்கு, தேவனாகிய கர்த்தர் விரும்பும் காரியங் கள் என்ன, அவர் வெறுக்கும் காரியங்கள் என்ன என்பதையும் குறி த்த சில வசனங்களை வேதத்திலிருந்து ஆராய்ந்து அறிந்து கொள்வோம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே, உம்முடைய குமாரனுடைய ராஜ்யத் தின் பங்காளிகளாக இருக்கும்படி வேறு பிரித்தீர், அதை உணர்ந்து, இயேசுவைப் போல எப்போதும் உம்முடைய சித்தம் செய்ய என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:4