புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 20, 2019)

காலத்தை அறிந்து கொள்ளுங்கள்

எபேசியர் 5:16

நாட்கள் பொல்லாதவை களானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.


நாட்கள் கொடியதாக மாறிக் கொண்டிருக்கின்றபடியால் இப்போது எங் களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு நாளையும் நாங்கள் பிரயோஜனப்ப டுத்திக் கொள்ள வேண்டும். எப்படியாக நாட்கள் மாறிக் கொண்டு போகி ன்றது? பாவமும் பாவத்தை உண்டு பண்ணும் செயல்களும் இப் போது அதிகதிகமாக மலிந்து கொண்டு போகின்றது. அது மட்டுமல் லாமல், வேதத்திலே பாவம் என்று திட் டமாக வகுக்கப்பட்டு இருக்கும் காரியங் களை சட்டபூர்வமாக செய்வதற்கு அனு மதி கொடுக்கும் நாடுகளும் அதிகரித் துக் கொண்டு செல்கின்றது. இதன் விளைவு அடுத்த தலைமுறையினரு க்கு அதிக பாதிப்பை கொடுக்கும். ஏனெ னில், மழலைகள் வளர்ந்து பாடசா லைக்குச் செல்லும் வேளையில், பாவ மான பல காரியங்கள் சட்டமாக இருப்பதால், அதைப் பாவம் என்று எண்ணிக் கொள்ளமாட்டார்கள். இப்படியாக பாவம் மலிந்திருக்கின்றது. இன்னுமொரு பக்கமாக, வேதப்புரட்டுகள் அதிகரித்து கொண்டே போகி ன்றது. அதாவது, மலிந்து கொண்டிருக்கும் பாவத்திலிருந்து விடுதலை யடையும் தூய வழியை அறிந்து கொள்ள முடியாதபடிக்கு, அநேக போலியான உபதேசங்கள் இன்று போதிக்கப்பட்டு வருகின்றது. இத னால், கிறிஸ்தவம் என்ற போர்வையை போர்த்துக் கொண்டு, தங்கள் மாம்ச இச்சைகளை நிறைவேற்றும்படி பலர் பல வழிகளை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இவைகளினால், தேவனுடைய நாமம் தேவனை அறியாதவர்கள் மத்தியில் தூ~pக்கப்பட்டு வருகி ன்றது. இதனால் தேவனை பற்றிக் கொண்டு வாழ்ந்தவர்கள் கூட, பின்மாற்றமாய் போய்விடுகின்றார்கள். இவை யாவற்றிற்கும் உரிய தண் டனையை தேவன் குறித்த காலத்தில், அவரவர் பெற்றுக் கொள்வார் கள் (யூதா 1:14-15). எனவே புதிதாய் நுழையும் உபதேசங்களைக் குறித்த எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். நான் சுயாதீனன், என க்கு சுதந்திரம் இருக்கின்றது என்று கூறி பலர் தங்கள் கண் போன வழியிலே சென்று கொண்டிருக்கும் காலம் இது. தேவ பிள்ளைகளா கிய நாங்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். தேவனுக் கென்று நாங்கள் செய்யும் கிரியைகளில் ஓய்ந்து போகக்கூடாது. எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த அருமையான சந்தர்ப் பங்களை நாங்கள் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நாட்கள் கொடியதாக மாறிக் கொண்டிருப்பதை அறிந்து, இன்னும் அதிகமாக உமக்கென்று சேவை செய்ய பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 24:11-13