புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 18, 2019)

நான் குணமடைய வேண்டும்

1 யோவான் 1:9

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.


ஒருவரும் செல்லக் கூடாது என்று தடை போடப்பட்டிருந்த காட் டிற்குள் சென்று மரங்களை வெட்டிய மனிதன் ஒருவனை பயங்கர மாக வனவிலங்கு ஒன்று தாக்கியது. கையிலே ஏற்பட்ட பெரிய காய த்திலிருந்து இரத்தம் அதிகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஒரே ஒட்ட மாய் ஓடி அருகிலிருந்த ஊருக்குள் சென்று விட்டான். அந்த ஊரார் யாவரும் அவனைப் பார்த்தார்கள். அந்த வேளையிலே அவன் “நான் மட்டுமா இப்படிக் காயப்பட்டேன், இன்னும் எத்த னை பேர் காயப்பட்டிருக்கின்றார்கள்” “ஊரின் பஞ்சாயத் தலைவரின் மகனும் இப்படியாக காடு சென்று மரம் வெட்டி வருகின்றானே” “இது மட்டும்தானா களவு? ஊரில் எத்தனை கள்ளர்கள் இரு க்கின்றார்கள்” என்று கூறிக் கொண்டி ருப்பானென்றால், அவன் இரத்தம் மிகை யாக ஓடி உயிருக்கு ஆபத்து நேரிட லாம். இங்கு கேட்கப்பட வேண்டிய கேள்வி என்ன? நீ உயர் தப்பி வாழ விரும்புகின்றாயா? மற்றவன் ஏதும் செய் திருக்கலாம் அல்லது செய்து கொண்டிருக்கலாம். நீ குணமடைய விரு ம்புகின்றாயா? பிரியமானவர்களே, இதற்கொத்ததாகவே இன்று பலர் சபை ஐக்கியங்களிலும், “அவர்கள் செய்கின்றார்கள் நான் செய்தால் என்ன?” “அந்த நாட்டிலுள்ள ஊழியரே தவறியிருக்கி ன்றார் நான் தவறினால் என்ன?” “நீங்கள் செய்யாத குற்றத்தையா நான் செய்து விட்டேன்?” இப்படியான கூற்றுக்கள் சுய பெருமைக்கு ரியவைகள். மனந்திரும்புதலுக்குரியவைகள் அல்ல. இங்கு கேட்கப் படும் கேள்வி என்னவென்றால், “நீ குணமடைய விரும்புகின்றாயா?” நீ பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை உன்னுடைய வாழ்வில் செய்ய விரும்புகின்றாயா?” விரும்பினால், மற்றவன் செய்யும் குற்றத்தைப் பார்த்து உன் மனதை தேற்றிக் கொண்டு, அழிவை நோக்கி செல் லாமல், இன்றே ஒப்புக்கொடு! நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாய த்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நான் செய்யும் குற்றங்களை மற்ற வர்களும் செய்கின்றார்களே என்று என்னை தேற்றிக் கொள்ள முய லாமல், பாவங்களை விட்டுவிட என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 5:1-15