புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 12, 2019)

உலகம் இரட்சிப்படையும்படி

யோவான் 3:17

அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.


“இந்த காவற்துறை அதிகாரி எவ்வளவு சிறப்பாக சேவையை செய் தாலும், இயேசுவை அறியாத அந்நியனாக இருப்பதால் நரகத்திற்கு செல்லப் போகின்றாரே” “இந்த மருத்துவர் எவ்வளவாய் படிந்திருந்தா லும், இயேசுவை அறியாததால் நரகத்திற்கு செல்லப் போகின்றாரே” என்று இப்படியாக இயேசுவை அறியாத மனிதர்களை காணும் போது ஒரு மனிதனின் உள்ளத்திலே நினைவுகள் தோன்றிற்று. காலப்போக் கில் அது அலையலையாய் எழுந்து வர ஆரம்பித்தது. இதனால், அவன் மனம் கடினப்பட ஆரம்பித்தது. சற்று இந்த சம்பவத்தை சிந்தித்து பாருங் கள்! எங்களில் பலர் இயேசுவை அறி யாமல் வாழ்ந்து வந்த நாட்கள் அதி கம். தேவ கிருபை எங்கள் வாழ்வில் வெளிப்பட்டதால், இயேசு வழியாக உண்டான பாவ மீட்பை பெற்றுக் கொண்டோம். இன்று நாங்கள் அழிந்து போகாமல், இயேசுவை பற் றிக் கொண்டு வாழ்வது அவருடைய கிருபை. நாளைய நாள் எங்களு டைய கரங்களில் இல்லை. எனவே இயேசுவை அறியாத மருத்துவரை காணும் போது “இவர் வழியாக எங்களுக்கும் மற்றவர்களுக்கும் கிடை க்கும் நன்மைக்கு, அந்த மருத்துவருக்கும், தேவனுக்கும் நன்றி செலு த்துவதோடு, அந்த மருத்துவரும் இயேசுவை அறிய வேண்டும், நித் திய வாழ்வை கண்டடைய வேண்டும் என்று வாஞ்சிக்க வேண்டும். தெருவை சுத்தம் செய்கின்றவர்களாக இருந்தாலும், தேசத்தின் தலை வராக இருந்தாலும், எல்லோருடைய ஆத்துமாக்களும் தேவனுடைய பார்வையிலே விலையேறப்பெற்றவைகள். தேவனிடத்தில் வேற்றுமை ஏதும் இல்லை. எல்லோரும் இரட்சிப்படைந்து நித்திய வாழ்வை பெற் றுக் கொள்ள வேண்டும் என்பதே பிதாவாகிய தேவனுடைய சித்தம். எனவே காண்கின்ற யாவரையும் பாவி என்று எங்கள் இருதயத்தால் தள்ளிவிடக்கூடாது. இயேசுவை அறியாத நாட்களிலே, ஒருநாள் நாங்களும் அந்த நிலையிலே இருந்தோம். தேவனுக்கு விரோதமாக பேச்சுக்களை பேசியிருந்தோம். விக்கிரக ஆராதனைக்கு உட்பட்டிரு ந்தோம். எனவே நாங்கள் அந்தகார கிரியைகளுக்கு உடன்பட்டவர்கள் அல்ல. ஆனால் எங்கள் உள்ளத்திலே, ஒவ்வொருவரும் செய்யும் சேவை க்கு நன்றியுள்ளவர்களாகவும், அவர்களுடைய ஆத்துமா பாதாள த்திலே அழிந்து போகாமல், பரலோகிலே நித்திய வாழ்வை அடைய வேண்டும் என்ற மனநிலையுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தகப்பனே, தங்களை தாழ்த்தி, உம்மிடம் வரும் எல்லோரையும் நீர் ஏற்றுக் கொள்ளுவீர் என்ற உண்மையை உணர்ந்து, எல்லோரின் மீட்புக்காகவும் ஜெபிக்கும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 5:15