புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 11, 2019)

கர்த்தருடைய விருப்பம்

சங்கீதம் 37:34

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்;


சாட்சியான முன்மாதியான வாழ்க்கை வாழ வேண்டும். வெளி இடங் களிலே மனதார நற்கிரியைகளை செய்ய வேண்டும் என்பதை நாங் கள் யாவரும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் சபை ஐக்கியத்திலே, சகோதரர் மத்தியிலே, எப்படி சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வது? ஆரா தனை நேரங்களிலே சாட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நேரத்திலே எழுந்து தேவனுடைய நாமத்தின் மகிமைக்கென்று அவர் செய்த கிரியைகளை கூறுகின்றோம். இது சாட்சியுள்ள வாழ் க்கையின் ஒரு பகுதி. இதற்கு இன் னும் மேன்மையான காரியங்கள் உண்டு. மோசே என்னும் தேவ ஊழியர், தேவ னுடைய ஜனங்களை எகிப்தின் அடி மைத்தனத்திலிருந்து, வாக்களிக்கப்ப ட்ட கானான் தேசத்திற்கு அழைத்துச் செல்லும்படியாக நியமிக்கப்பட்டார். அந்த வனாந்திர யாத்திரையிலே, தேவனுடைய ஜனங்கள் மத்தியிலே பல விரும்பப்படாத சம்பவங்கள் நடைபெற்றதை நாங்கள் அறிவோம். அதாவது, தேவனை அறியாத புறஜாதி மனிதர்களால் வந்த உபத்திரவங்கள் அல்ல, இவை தேவனை அறிந்து, அவருடைய பலத்த அற்புதங்களை கண்ட ஜனங்களால் உண்டான உபத்திரவங்கள். அப்படியான சூழ்நிலைகளிலே நாங்கள் எங்கள் நடக்கையை காத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒத்த தாகவே, இன்று சபை நடுவில் சில விரும்பப்படாத சம்பவங்கள் நடைபெறலாம். உதாரணமாக, நீங்கள் செய்யாத குற்றம் ஒன்றை நீங் கள் செய்தீர்கள் என ஒருவர் உங்களை குற்றம் சாட்டினார் என்று உங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. இந்த வேளையிலே, தேவனு டைய நாமம் உங்கள் வழியாக மகிமைப்படும்படியாக நீங்கள் தேவ னுக்கு எப்படி சாட்சியாக இருக்க முடியும்? உங்களுக்கு ஆதரவாக ஒரு குழுவை ஏற்படுத்திக் கொள்வீர்களா? குற்றம் சாட்டியவரும் அவ் வண்ணமாகவே செய்யக் கூடும். நியாயத்தையும் நீதியையும் உங்கள் எண்ணப்படி உங்கள் கைகளில் எடுத்துக் கொள்வீர்களா? குற்றம் சாட்டியவர்களும் அப்படியே செய்யக் கூடும். இவைகளின் முடிவு அழிவு. எனவே, தேவன் விரும்புவதை செய்ய வேண்டும். தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இருப்பது போல நாங்களும் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படியாக விரும்பப்படாத எல்லா சூழ் நிலைகளிலும் தேவனுடைய விருப்பம் எங்கள் வாழ்வில் நிறைவேறு வதே சாட்சியுள்ள வாழ்;க்கை.

ஜெபம்:

நீதியின் தேவனே, எந்த சூழ்நிலையிலும், உபத்திரவத்திலும், அவமானத்திலும், உம்முடைய விருப்பம் என்னில் நிறைவேறும்படி யான வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - 1 தெச 4:3-7