புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 10, 2019)

முன் மாதிரியான வாழ்க்கை

1 தெசலோனிக்கேயர் 1:7

இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.


“நாங்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியானவர்கள்” என்று எங்களைக் குறித்து நாங்கள் கொடுக்கும் சாட்சிகளில் பிரயோஜனம் ஒன்றுமில்லை. எங்கள் நற்கிரியைகளைக் கண்டு மற்றவர்கள் அதற்கு சாட்சி பகரும் படியாக எங்கள் வாழ்க்கை அமைய வேண்டும். (நீதி 27:2) பரிசுத்த வேதாகமத்திலே, புதிய ஏற்பாட்டில், காணப்படும் தெசலோனிக்கேயா என்னும் பட்டணத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், தங்கள் அயலிலுள்ள மக்கெதோனியா அகாயா என்னும் பட் டணங்களிலுள்ள விசுவாசிகள் யாவ ருக்கும் நற்சாட்சிகளாக இருந்தார்கள். இன்று இந்த உலகிலே, பல நாடு களிலே மதச் சுதந்திரம் கொடுக்க ப்பட்டிருகின்றது. அதாவது, ஒருவன், ஒரு மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள விரும்பினால் அது அவனுடைய தனி ப்பட்ட தீர்மானம் என்று கூறுகின்றா ர்கள். வேறு சில நாடுகளிலே, கிறி ஸ்தவர்கள் ஆங்காங்கே துன்புறுத்தப்படுவதை செய்திகள் வாயிலாக கேள்விப்படுகின்றோம். தேவ ஊழியராகிய அப்போஸ்தலர் பவு லுடைய நாட்களிலே, கிறிஸ்தவத்தை தழுவிக் கொள்கின்றவர்கள், அதிகமாக துன்புறுத்தப்பட்டார்கள். அப்படியிருந்தும், தெசலோனிக்க பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்கள், மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோ~த்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, கர்த்த ரை பின்பற்றுகிறவர்களானார்கள். அதாவது, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டோம், ஞானஸ்நானம் பெற்றோம் என்று அத்துடன் மௌனமாக இராமல், ஒருவரும் அவர்களுடைய மாதிரியான இரட்சிப்பின் வாழ்க்கையை குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின அவர்களுடைய விசுவாசம் அயல் பட்டணங்களிலே பிரசித்தமாயிற்று. எப்படியெனில், விக்கிரகங்களை விட்டு தேவனிடத் திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்தெழும்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிற வருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு, பரலோகத்திலி ருந்து வருவதை தாங்கள் எதிர்பார்த்துக் வாழ்க்கை வாழ்வதையும் குறித்து மற்றவர்களுக்கு சாட்சியாக அறிவித்தார்கள். இவ்வண்ண மாக எங்கள் வாழ்க்கையின் மாதிரியைக் கண்டு, மற்றவர்கள் அதைக் குறித்து சாட்சி பகரும்படி நாங்களும் வாழ வேண்டும்.

ஜெபம்:

பராக்கிரமம் நிறைந்த தேவனே, எந்த சூழ்நிலையிலும், உபத்திரவத்திலும், அவமானத்திலும், உம்முடைய இரட்சிப்பு என்னில் நிறைவேறும்படியான வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:12