புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 08, 2019)

என் பெலனான கர்த்தர்

ஏசாயா 30:15

அமரிக்கையும் நம்பிக் கையுமே உங்கள் பெல னாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்த ராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்;


இந்த உலகிலே மனிதர்கள் தங்கள், தங்கள் பெலனை பல வழிக ளிலே காண்பித்து வருகின்றார்கள். உடற்பெலன் உள்ளவர்கள்;, அதி காரத்தினால் பெலத்தவர்கள், ஐசுவரியத்தினால் பெலனடைந்தவர்கள், மற்றும் கல்வி, சமுதாய அந்தஸ்து உள்ளவர்கள். இன்னும் சிலர் துன் மார்க்க வழிகளினால் பெலனடைகின்றார்கள். இவை யாவும் நித்திய மாய் மனிதர்களிடம் நிலைத்திருப்பதில்லை. எடுத்துக் காட்டாக, இள வயதில் உடற்பலத்தில் நம்பியிருந்தவ ர்கள், வயது கடந்து செல்லும் போது அவர்களது பெலன் குறைந்து போகின் றது. மேற்கூறிய காரியங்களினால் உண் டாகும் பெலன் இந்த உலகத்தோடு அழிந்து போகும் பெலன். இவைகளி னாலே தேவனிடத்திலிருந்து மனிதன் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. ஒரு பெலவானின் பெலன் என்ன? மனக் குழப்பத்தின் நாட்களிலே தன் சரீர பெலனை வெளிக்காட்டுவதா? அல் லது குழப்பத்தின் நாட்களிலே சாந்த குணத்தை வெளிக்காட்டுவதா? யுத்த நாளிலே மனிதனுடைய புய பெலன் அவனுக்கு வெற்றியை கொடுக்குமோ? குதிரை வீரர்களால் வெற்றி சாத்தியமாகுமோ? படைப் பெலத்தினால் வீம்பு பேசுகின்றவர்கள் வெற்றி பெறுவார்களோ? ஆப த்து நாளிலே ஐசுவரியம் உதவுமோ? முரணான நாளிலே கல்வி மனி தனை இரட்சிக்குமோ? இல்லை! இவை மனிதனுடைய உயிருள்ள நாட் களில் அவனுக்கு திருப்த்தியை கொடுப்பதுமில்லை, அவருடைய மரண நாளிலே நித்திய வாழ்வின் நம்பிக்கையை தருவதுமில்லை. எங்கள் ஆவி அமைதலாக எப்போதும் தேவனுடைய வல்லமையில் தங்கி இருக்க வேண்டும். அவரையே எங்களுடைய வாழ்வின் திட நம்பிக்கையாக கொண்டிருக்க வேண்டும். அங்கேயே மனிதனுடைய உண்மையான பெலன் இருக்கின்றது. அந்த பெலன், இந்த பூமியிலே அவன் உயிர் வாழும் நாட்களில் மனத்திருப்த்தியையும், அவன் இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்லும் போது, நித்திய வாழ்வின்; உறுதி யையும் அவனுக்கு கொடுக்கின்றது. தேவன் மேல் பெலன் கொள்ளும் மனிதர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள். அவர்கள் பெலத்தின் மேல் பெலனடைந்து பரம சீயோனைக் காண்பார்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நான் நம்பி, அதைப் பற்றிக் கொண்டு, அதன்படி வாழ்ந்து, உம்மிலே பெலன் கொள்ளும் பிள்ளையாக இருக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 20:7-8