புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 07, 2019)

கலகம் வேண்டாம்

எபேசியர் 4:3

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.


குறிப்பட்ட ஒரு இடத்திலே ஏதோ காரணத்திற்காக கலகம் ஏற்பட்டுவிட் டது. தன்னை பொறுமைசாலி என்றும், சமாதான தொண்டர் என்றும், நீதி நியாயங்களை விரும்புகின்றவர் என்றும் எண்ணிக் கொண்ட மனி தன், அந்த இடத்திற்கு தற்செயலாக வந்த போது, கலகத்தினால் ஒரு வரோடொருவர் வாக்குவாதம் செய்வதை கண்டபோது, கடும் கோபம் கொண்டார். அதனால் அந்த இடத்திலே பெரிதான சத்தம் போட்டு அந்த ஜனங்களை கடுமையாகக் கடிந்து கொண்டார். ஏற்கனவே, மன வேதனையோடு, இருந்த ஜனங்கள், இந்த மனிதனின் சத்தத்தினாலே இன்னும் அதிக கோபம் கொண்டதினிமி த்தம், கலகம் இன்னும் அதிகமாக பெரு கிவிட்டது. பிரியமானவர்களே, இதன் கருப்பொருளாவது, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுபவர்களாக நாங் கள் மாறிவிடக்கூடாது. சில வேளைக ளிலே எங்களை சூழ நடக்கும் சம்பவங் கள் விரும்பப்படத்தக்கதல்ல. அதனால் உடனடியாக நிலை தவறி குழப்பமடை ந்துவிடக் கூடாது. தேவ ஊழியராகிய பவுல் கூறியதைப் போல, “நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழை க்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத் தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன் பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.” ஆம்! எந்த விதத்திலும் நாங்கள் பிரிவினைக்கு காரணராக மாறிவிடக்கூ டாது. மனதில் குழப்பம் ஏற்பட்டால், முதலாவதாக, எங்கள் வார்த்தை பிரயோகத்தை நிறுத்த வேண்டும். பின்பு, மேற்கொண்டு எந்த ஒரு அடியும் எடுத்து வைக்க முன்பு, தேவனுடைய பாதத்திலே ஜெபத் திலே தரித்திருப்பதே சாலச் சிறந்தது. பின்பு, நிதானமுள்ள ஆவி யோடு, உங்கள் போதகரை அணுகி தயவாய் உங்கள் பிரச்சனை களைக்; கூறுங்கள் அல்லது தேவ சித்தம் நிறைவேறும்படி ஊக்கமாக ஜெபிப்பவர்களுடன் பேசுங்கள் அல்லது தேவனுடைய குறித்த நேரம் வரும்வரைக்கும், அவருடைய பாதத்திலே சகலவற்றையும் ஒப்புக்கொ டுத்து தினமும் ஜெபம் செய்யுங்கள். எந்த ஒரு காரணத்தினாலும் மற் றவர்களையோ, சபையையோ குழப்புகின்றவர்களாக மாறிவிடாதிரு ங்கள். சமாதானம் பண்ணுகின்றவர்களே தேவனுடைய புத்திரர்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, என்னுடைய பேச்சினாலோ, கிரியைகளி னாலோ யாதொரு கலகத்தையும் எழுப்பிவிடாதபடிக்கு, சாந்தத்தோடும் பொறுமையோடும் உம்மில் நிலைத்திருக்க அருள் புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:9