புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 06, 2019)

கர்த்தர் செய்து முடிப்பார்

பிலிப்பியர் 4:2

கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.


கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த நாட்களில் அதிகதிமாக ஒரு மனதையும், ஐக்கியத்தைக் குறித்தும் அதிகமாக தியானித்து, தேவ ஜனங்கள் மத்தியிலே ஒருமனமும் ஐக்கியமும் பெருகும்படிக்கு தினமும் ஜெபம் செய்யுங்கள். தேவ ஊழியராகிய பவுல் வழியாக எழுதப்பட்ட பதின்மூன்று (13) நிரூபங்களில் ஒன்று பிலிப்பியர் நிருபமாகும். அப்போஸ் தலராகிய பவுல், கிறிஸ்துவின் நற்செய்தியை (பாவத்திலிருந்து விடுதலை அடையும் வழி, பூமியில் சமாதான மான வாழ்வு, பரலோகத்திலே முடிவி ல்லாத வாழ்வு) அறிவித்ததின் நிமித்த மாக சிறையிலே போடப்பட்டிருந்தார். அங்கிருந்து இந்த அழகான நிரூப த்தை (கடிதம்) எழுதும்படியாக தேவ ஆவியானவர் வழியாக வழிநடத்தப்ப ட்டார். அதன் கடைசி அதிகாரமாகிய 4ம் அதிகாரத்தின் முதற்பகுதி யிலே எயோதியாள், சிந்திக்கேயாள் என்பவர்களை ஏகசிந்தையுள்ளவர்களாக இருக்கும்படி புத்தி கூறுகின்றார். யார் இந்த எயோதியாளும் சிந்திக்கேயாளும்? வேதப்புரட்டர்களா? இல்லை! சபையை குழப்பி வந்தவர்களா? இல்லை! அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன் வேலையாட்களோடுங்கூடச் சுவிசே~ வி~யத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தக த்தில் இருக்கிறது. (பிலி 4:3). ஆம் பிரியமானவர்களே, பிரிவினை யின் வித்துக்கள் தேவனுடைய ராஜ்யத்திற்காக வலுவாக பிரயாசப்ப டும் பரிசுத்தவான்கள் மத்தியிலும் தோன்றலாம். எயோதியாள், சிந்திக் கேயாள் என்பர்களின் நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. ஆனா லும் ஏதோ சில காரணங்களால் அவர்கள் ஏகசிந்தை அற்றவர்களாக மாறிவிட்டார்கள். அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி அங்கிருந்தவர் களை பவுல் வேண்டிக் கொண்டார். எங்களுக்குள்ளும் இப்படியான நிலைமைகள் உருவாகும் போது, ஒருவரை ஒருவர் சபிக்காமல், ஒன் றுக்கும் கவலையடையாமல், நாங்கள் ஒருவருக்காக ஒருவர் தேவனை நோக்கி வேண்டிக் கொள்ள வேண்டும். எங்களை அழைத்த தேவன், இன்னும் பலரையும் அழைத்திருக்கின்றார். உண்மையுள்ள தேவன், எல் லாவற்றையும் நடத்தி முடிப்பார் என்ற ஏகசிந்தை எங்கள் மத்தியிலே எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, நீர் வாக்குரைத்தபடி செய்து முடிப் பவர் என்பதை எப்போதும் உறுதியாய் விசுவாசித்து, என் வாழ்வில் உம்முடைய நீதி நிறைவேறும்படி பொறுமையாய் இருக்க பெலன் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோசுவா 21:45