புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 05, 2019)

ஒன்று சேர்ந்து ஜெபிப்போம்

மாற்கு 3:24

ஒரு ராஜ்யம் தனக்கு தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.


கர்த்தராகிய இயேசு இந்த பூமியிலே வாழ்ந்த நாட்களிலே, ஒரு சமயம் அவரும் அவருடைய சீ~ர்களும் ஆகாரம் உண்பதற்கு நேரம் இல்லாதபடிக்கு ஜனங்கள், இயேசு தங்கியிருந்த வீட்டிற்கு கூட சென் றார்கள். அந்நாட்களிலே யூத மத பிரமாணங்களில் பாண்டித்தியம் பெற்ற வேதபாரகர் என்னும் குழுவினர் இயேசு செய்து வந்த அற் புதங்களை கண்டு எரிச்சலடைந்ததால், இவன் பெயெல்செபூலைக்கொண்டிரு க்கிறான். பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார் கள். இயேசு அவர்களை நோக்கி: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. சாத்தான் தனக்குத் தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமா ட்டாமல், அழிந்துபோவானே என்றார். ஆம் பிரியமானவர்களே, சாத்த னுடைய ராஜ்யம் அவனுக்குள் ஒன்றாய் இருக்கின்றது. மனிதர்களை வஞ்சித்து தேவனிடம் இருந்து அவர்களை பிரிப்பதிலும், மனிதர்கள் மத்தியிலே பிரிவினைகளை உண்டாக்கி, அவர்கள் மத்தியிலே கலக ங்களை கிளப்பி, தேவ சித்தம் அவர்கள் வாழ்வில் நிறைவேறாதி ருக்க வேண்டும் என்பதிலும் சாத்தனுடைய ராஜ்யம் ஒன்றுபட்டிருக்கி ன்றது. தேவனுடைய வீடு, தேவனுடைய வீட்டாருக்கு எதிராக இருக்க முடியுமோ? இல்லை அப்படி இருக்க மாட்டாது! தேவனுடைய ராஜ் யம் தனக்குள் தானே பிரிந்திருக்க கூடுமோ? இல்லை. தேவ ஜனம் ஒருமனப்பட்டு ஐக்கியமாக இருக்கும் இடத்திலே தேவனுடைய ஆவி யானவர் கிரியை செய்கின்றார். தேவ ஜனங்கள் இசைந்திருக்கும் இடத்தில் தேவ ஆவியானர் ஆளுகை செய்கின்றார். எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் இயேசுவின் நாமத்தினால் ஒருமனப்பட்டிருக்கி ன்றார்களோ, அவர்கள் மத்தியிலே இயேசு பிரசன்னமாய் இருக்கிறார். ஒருமனமும் ஐக்கியமும் தேவனுடைய ராஜ்யத்தின் சிறப்பம்சம். இந்த சிறப்பை, எங்கள் மத்தியிலே, சாத்தான் குலைத்துப் போடாமல் சாத்தானின் அரண்களை தகர்த்தெறியும்படி இயேசுவின் நாமத்தில் ஒருமனப்பட்டு, ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, சாத்தானின் வஞ்சகமான பிரிவினைகளின் கண்ணிகளை தகர்த்தெறியும்படிக்கு ஊக்கமாக ஒரும னப்பட்டு ஜெபிக்கும்படிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 10:3-5