புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 04, 2019)

ஒன்றையே சிந்தியுங்கள்…

பிலிப்பியர் 2:2

நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களா யிருந்து, இசைந்த ஆத் துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங் கள்.


“பிரித்து ஆட்சி செய்வோம்” (னுiஎனைந யனெ சரடந) என்ற பதத்தை ஒரு வேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது, முற்காலங்க ளிலே, பல ராஜ்யங்களை ஆளும் அரசர்கள், தாங்கள் ஆளும் ராஜ் யங்களின் ஜனங்கள் ஒருமித்து தங்களுக்கு எதிராக கலகம் பண் ணாதபடிக்கு, அவர்கள் மத்தியிலே வேற்றுமைகளை உண்டு பண் ணிவிடுவார்கள். அதனால், அந்த ராஜ்யங்கள் எந்த ஒருவிடயத்திலும் ஒருமனப்பட மாட்டார்கள், அவர்கள் மத்தியிலே ஐக்கியம் என்ற சொல்லிற்கு இடமிருக்காது. மேற்கூறிய விடயம் ஒரு குடும்பத்தை எப்படி வலுவிழக்கப் பண் ணிவிடுகின்றது என்பதை சற்று ஆரா ய்ந்து பாருங்கள். உதாரணமாக ஒரு குடும்பத்தில் நாலு சகோதரர்கள் இரு க்கின்றார்கள் என்று வைத்துக் கொள் வோம். அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக இருந்தால், ஒரு வர் செய்யும் நல்லாக்கத்திற்கு மற்றய மூவரும் எதிர்த்து நிற்பார்கள். அந்த நல்ல ஆக்கம் கைகூடாதபடி எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரயாசப்படுவார்கள். இதனால் அந்த குடும்பம் வளர்ந்து பெருக மாட்டாமல், குன்றிப்போய்விடுகின்றது. “பிரித்து ஆட்சி செய் வோம்” என்பது “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற கதைக்கு மு ரணானது. எனவே பிரிவினையுள்ள எந்த ஒரு குழுவின் ஆக்கத் தையும் உடைத்து விடுவது, அந்த குழுவின் எதிரிக்கு இலகுவானது. இந்த கூற்றிற்கு, நாங்கள் கூடி ஆராதிக்கும் ஐக்கியம் விதிவிலக் கானதல்ல. பிரிவினை என்னும் சிறிதான கசப்பான வேர் எங்கள் இரு தயத்தில் தோன்று முன்னமே, தேவனுக்கு எதிரான அந்த மாம்சத்தின் எண்ணத்தை, இயேசுவின் நாமத்தில் கடிந்து கொண்டு, முற்றாக அகற்றிவிட வேண்டும். ஏனெனில் எங்கள் சிந்தைகள் வேறுபட்டிருக்க முடியாது. அவரவர் குடும்பத்தில் போட்டி மனப்பான்மை இருக்கலா காது. அவரவர் சபையில் போட்டி மனப்பான்மை இருக்கலாகாது. அதே போல சபைகளுக்கு மத்தியிலும் போட்டி மனப்பான்மை இரு க்கலாகாது. பிதவாகிய தேவனுடைய சித்தம் எங்கள் வாழ்வில் நிறைவேறும்படிக்கு கிறிஸ்துவுக்குள் ஒருமனதோடு பணி செய்து முன்னேறுவோம்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, கிறிஸ்துவுக்குள் ஏக சிந்தையுள்ளவர்களாகவும், இசைந்த ஆத்துமாக்களாகவும், ஒருமனது டன், பெற்ற பணியை செய்து முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:15