புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 03, 2019)

கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவர்

எசேக்கியேல் 18:32

மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண் டவர் சொல்லு கிறார்.


ஊரிலே வசிக்கும் தீங்கை பிணைக்கிறவர்களில் சிலர் என்னுடன் சண் டைக்கு வருகின்றார்கள் என்று ஒரு இளைஞன் தன் தந்தையிடம் கூறினான். தந்தை தன் மகனை நோக்கி: மகனே, நீ அவர்கள் என்ன செய்தாலும் அவர்களை எதிர்த்து சண்டைக்கு போகக்கூடாது. நீ உன் நன்நடத்தையை காத்துக் கொள். அவர்கள் வழிகளைவிட்டு உன்னைத் தூரப்படுத்திக் கொள் என்று கூறினார். எங்களை நேசிக்குத் எங்கள் பரம பிதா வும் அவ்வண்ணமாகவே, தேவ பிரமா ணங்களை நன்கு அறிந்திருந்தும் அவை களை அசட்டை செய்து வாழும் ஜன ங்கள் மத்தியில் எங்கள் இரட்சிப்பை காத்துக் கொள்ளும்படிக்காய் அறி வுரை கூறுகின்றார். குற்றம் செய்தவ ர்கள் தண்டனையைப் பெறாமல் இரு க்க, நாங்கள் ஏன் அவர்கள் குற்றங் களை சகிக்க வேண்டும்? ஏன் தேவன் அவர்களை உடனடியாக தண்டிக்கக் கூடாது? ஏனென்றால் ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே தேவனுடைய அநாதி தீர்மானம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகி றபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2 பேதுரு 3:9) துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். (எசேக்கியேல் 18:23). கர்த்தர் தம்முடைய ஜனத்தை நோக்கி: நான் உங்களில் அவ னவனை, அவனவன் வழிகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங் களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை. அக்கிரமக் காரருடைய ஆத்துமா நித்திய மரணத்தை (சாவை) அடைவதை தேவன் விரும்பவில்லை. எனவே எங்கள் பரம தந்தை நீடிய பொறுமையுள்ள வராக இருப்பது போல, அவருடைய பிள்ளைகளாகிய நாங்களும் அவருடைய நீதி நிறைவேறும் வரைக்கும் நீடிய பொறுமையுள்ளவர் களாக இருப்போம்.

ஜெபம்:

நீதியின் தேவனே, துன்மார்க்கரின் பொல்லாத கிரியைகளை கண்டு குழப்படையாமல், உம்முடைய நீதி நிறைவேறும் நாள்வரை க்கும் நாங்கள் பொறுமையாய் இருக்க பெலன் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எண் 14:17-18