புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 02, 2019)

ஆதி நிலைக்குத் திரும்புங்கள்

வெளிப்படுத்தல் 2:7

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்;.


“உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமை யையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப் போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகி றதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாம த்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கி றேன்” என்று எபேசு என்னும் சபைக்கு கர்த்தராகிய இயேசுதாமே செய்தி அனுப்பினார். அந்நாட்களில் மாத்திரம ல்ல, இந்நாட்களிலும் நாங்கள் ஆங் காங்கே இப்படிப்பட்ட நிலைமைகளை காணக்கூடியதாக இருக்கின்றது. சிலர், மற்றவர்களை திருத்த வேண்டும் என்று, தங்களுக்கடுத்த அலுவல்களில் தலையிட்டு, தாங்கள் பெற்ற மகத்து வமான இரட்சிப்பை காத்துக் கொள்ள மறந்து விடுகின்றார்கள். இதன் விளைவாக தேவனுடைய பிள்ளைகள் பின்னிட்டு, இளைப்படைந்து சோர்ந்து போய்விடக் கூடிய சாத்தியங்கள் உண்டு. இவ்வண்ணமா கவே, எபேசு சபையிலே இருந்த தேவ பக்தர்கள், தேவனை அறிந்த நாட்களிலே, தேவன்மேல் கொண்ட அன்பை விட்டு வழுவிப் போனார் கள். அவர்கள் நீதியின் கிரியைகளைவிட்டும் ஓய்ந்து போய்விடுகின்றா ர்கள். இங்கே இரண்டு சாராரைக் காண்கின்றோம். ஒரு சாரார் பொல் லாதவர்கள், பொய்யர்கள், வேதப்புரட்டர்கள். இன்னுமொரு சாரார் தேவனைச் சார்ந்து தேவனுக்கென்று உண்மையாக பிரயாசப்பட்டவர் கள். ஆனால் இப்போது சற்று பின்னிட்டிருக்கின்றார்கள். கர்த்தரா கிய இயேசு தமக்கென்று உண்மையாய் பிரயாசப்பட்டவர்களுக்கே செய்தியை அனுப்புகின்றார். அவர்கள் கர்த்தருக்கென்று வேறுபிரிக்க ப்பட்டவர்கள். அவர்கள் செய்த எல்லா நற்கிரியைகளையும், அவர்க ளின் பொறுமையையும் அறிந்திருக்கின்றார். அதுபோலவே எங்கள் நிலைமையும் அவர் நன்கு அறிந்திருக்கின்றார். ஒரு வேளை எங்களை சூழ நடக்கும் அநீதியின் கிரியைகள் எங்களை சோர்வடையச் செய் யலாம். ஆனால் நாங்கள் வேதப்புரட்டர்களை பார்த்து சோர்ந்து போகா மல், ஆரம்பத்திலே தேவன் பேரில்; கொண்ட அன்பிற்கு திரும்ப வேண் டும் என்று ஆவியானவர் சபைகளுக்கு சொல்லும் செய்திக்கு கீழ்ப்ப டிந்து, தொடர்ந்து முன்னேறுவோம்.

ஜெபம்:

சகலமும் அறிந்த சர்வ வல்லவரே, ஆதி நிலைக்குத் திரும் பும்படியாய் தேவ ஆவியானவர் கூறும் செய்திக்கு கீழ்ப்படிந்து, இன்னும் அதிகதிமாக செயற்படத்தக்கதாக எனக்கு பெலன் தந்து வழிநடத்துவீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2