புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 01, 2019)

தர்க்கிப்பை விட்டுவிடுங்கள்

பிலிப்பியர் 2:16

எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.


எங்கள் பிள்ளைகளில் ஒருவர், வீட்டில் பல வேலைகளை செய்தா லும், அதை முறுமுறுப்போடே செய்தால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்வீர்களா? “நான் மட்டும் தானா வேலை செய்ய வேண்டும்” “வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு இதைக் குறித்து அக்கறை இல்லையா” இப்படியாக பலவிதமான முறைப்பாடுகள் பிள்ளைகளிடமிருந்து வருவ துண்டு. பிள்ளைகள் இப்படியாக முறு முறுப்போடே வேலை செய்து வந்தா லும், ஒரு நாளில் அவர்கள் அந்த முறு முறுப்பைவிட்டு, விவாதங்களை விட்டு ஓய்ந்து முழுமனதோடே தங்கள் நாளா ந்த அலுவல்களை “இது என்னுடைய வீடு” “இது என்னுடைய குடும்பம்” என்ற உணர்வோடு செய்யும் நிலை க்கு வளர்ந்து வருவார்கள் என்பதே பெற்றோரின் ஏக்கம். தேவனுக்கென்று வேறு பிரிக்கப்பட்டவர்களாகிய நாங்களும்;, முழுமனதோடு கர்த்தருக்கென்று சேவை செய்ய வேண் டும். எப்போதும் தேவனுடைய ஊழியங்களுக்கு அனுசரணையாகவும், ஒத்தாசையாகவும் இருக்க வேண்டும். இருள் நிறைந்த இவ் உலகத் திலே, குறைகள் மலிந்திருக்கின்றது. நாங்களோ நிறைவு உண்டாகும் படிக்கு, ஒளிவீசும் சுடர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, நாங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்ற வர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிரு க்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாம லும் செய்ய வேண்டும் சில வேளைகளிலே, எங்களை சுற்றி நடைபெ றும் காரியங்களை உற்று நோக்குவதால், நாங்கள்; எங்களை அறி யாமலே, சிறு பிள்ளைகளைப் போல முறுமுறுக்க ஆரம்பித்து விடுகி ன்றோம். அப்படி நாங்கள் செய்யும் போது, நாங்கள் செய்யும் கிரியை களால் நிறைவு உண்டாவதில்லை. நாங்கள் எதைச் செய்தாலும், தேவ னுக்கென்று முழுமனதோடு செய்ய வேண்டும். ஒரு வேளை நாங்கள் செய்து வரும் உதவி ஊழியங்கள், மனிதர்களுடைய பார்வையிலே அற்பமான காரியங்களாக இருக்கலாம் அல்லது பெரிய காரியம் என்று கருதப்படலாம். எவை எப்படியாக இருந்தாலும், நாங்கள் பெற்ற பணியை மனநிறைவோடு செய்து, தேவனுடைய பூரண சித்தத்தை எங்கள் வாழ் க்கையில் நிறைவேற்றுவதே எங்கள் நோக்க மாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பரலோக தேவனே, இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கமால், இயேசுவைப் போல என்னைத் தாழ்த்தி, மன நிறைவோடு பெற்ற பணியை செய்து முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2