புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 26, 2019)

ஒருவருக்காக ஒருவர் ஜெபித்தல்

கொலோசெயர் 4:4

திருவசனம் செல்லும்ப டியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்க ளுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்.


இன்று ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசி ஜெபிப்பதன் அவசியத்தை ஆராய்ந்து பார்ப்போம். தேவ ஊழியராகிய பவுல் என்பவரைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்திருக்கின்றோம். கிறிஸ்துவின் பணிக்காக பிரத் தியேகமான அழைப்பைப் பெற்ற இவர், எப்போதும் தேவனுடைய காரியங்களில் வைராக்கியமுள்ளவராக இருந்தார். தேவனோடு அதி கமாக ஜெபத்திலே இடைப்பட்டிருந்த இவர், எப்போதும் மற்றவர்களுடைய நிறைவான வாழ்க்கைக்காக வேண்டு தல் செய்து வந்தார். சில சந்தர்ப்பங்க ளிலே, முகமுகமாய் தரிசிக்காத உடன் சகோதர்களுடைய சந்தோஷத்திற்காக, அவர்களை நினைக்கும் போதெல்லாம் தேவனை ஸ்தோத்தரித்து வந்தார். இவ ருடைய திருப்பணியைப் பற்றி கர்த் தர்தாமே தெளிவானதும்; திட்டமானது மான வழிநடத்துதலை அவ்வப்போது கொடுத்து வந்திருந்தார். அவர் கொலோசெ பட்டணத்திலுள்ள விசுவாசிகளுக்கு எழுதும் போது “இடை விடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்தி ருங்கள். கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு, திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளு ங்கள் என்று கூறினார். சற்றி சிந்தித்துப் பாருங்கள்! தேவனிடத்திலி ருந்து யாருமறியாத இரகசியங்களை பெற்ற இவர், அந்த இரகசிய த்தை, இந்த பூவுலகிலே கூற வேண்டிய பிரகாரமாக மற்றவர்களுக்கு கூறும்படிக்கும், புதிய வாசல்கள் திறக்கும் படிக்கும் தன்னுடைய ஊழி யத்திற்காக ஜெபிக்கும்படியாக வேண்டிக் கொண்டார். கருப்பொருளா வது, நாங்கள் எந்த நிலையில் இருந்தாலும், எப்படிப்பட்ட அழை ப்பைப் பெற்றிருந்தாலும், இந்த பூமியிலே தேவன் எங்களுக்கு கொடு த்த பணியை வெற்றியோடு நிறைவேற்றி முடிப்பதற்கும், தேவன் விரு ம்பும் வாழ்க்கையை வாழ்வதற்கும் எங்களுக்கு ஜெபம் இன்றியமை யாதது. ஊழியராகிய பவுல் ஜெபம் செய்பவராக இருந்தாலும், தன் னைத் தாழ்த்தி, தனக்காகவும் ஜெபிக்கும்படி மற்றவர்களையும் வேண் டிக் கொண்டார். நாங்கள் மற்றவர்களுக்காக ஜெபிப்பதுடன், எங்களு க்காகவும் வேண்டிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, ஜெபத்தின் வல்லமையை உணர் ந்தவனா(ளா)க, மற்றவர்களுக்காக எப்போதும் பரிந்து பேசி ஜெபிக்கும் படிக்கு உற்சாகத்தின் ஆவியை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:18