புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 25, 2019)

தேவ சித்தம் நிறைவேறும்படி

பிலிப்பியர் 3:12

நான் எதற்காகப் பிடிக்க ப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகி றேன்.


கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்ட திருப்பணியை நிறைவேற்றி முடிக் கும்படி, அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் துன்புறுத்தப்பட்டார். ஒரு முறையல்ல பல முறை அடிகப்பட்டார், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டார்;, அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டார். கிறிஸ் துவின் நற்செய்தியின் நிமித்தமாக, இவர் பல முறை சிறைச்சாலை யிலே போடப்பட்டார். இவர் ஜெபம்; பண்ணும் போது, எல்லாச் சிறைசாலைக ளின் அஸ்திபாரங்களும் அசைக்கப்ப டவில்லை. அதனால் அவர் ஜெபிப் பதை நிறுத்திவிடவில்லை. கருப்பொ ருளாவது, தேவனோடு ஜெபத்திலே இடைப்படுவது, எந்த சூழ்நிலையிலும் துதித்துப் பாடுவது இவருடைய வாழ் க்கையிலே ஒரு வழக்கமான செய்கை யாக இருந்தது. மற்றவர்கள் பார்த்து பயந்து அதிசயிக்கத்தக்கதாக வெளிப்படையான அற்புதங்கள் எப்போ தும் நடைபெற வேண்டும் என்ற நோக்குடன் இவர் ஜெபிக்கவில்லை. மாறாக தேவன் என்ன நோக்கத்திற்காக தன்னைப் பிடித்துக் கொண் டாரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி, தேவ சித்தத்தை நடத்தி முடிப்பதே அவருடைய வாழ்வின் முதன்மையான நோக்கமாக இருந்தது. ஒரு பிள்ளை தன் தந்தையிடம் எப்போதும் ஏதாவது ஒரு பரிசுப் பொருளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தந்தை எப்போது வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்துக் கொண்டி ருந்தால், அவன் தந்தையை அல்ல தந்தையிடம் இருந்து வரும் பரிசுப் பொருளை எதிர்பார்ப்பவனாக இருப்பான். எங்கள் ஜெபமும் அப்படி இருக்கலாகாது. பரம பிதாவின் சித்தம் எப்படி பரலோக த்திலே செய்யப் படுகின்றதோ, அப்படியாக இந்த பூமியிலும், குறிப்பாக என் வாழ்க்கையிலும் நிறைவேறும்படியாகவே நாங்கள் ஜெபம் செய்ய வேண்டும். தேவனோடு நாங்கள் கொண்டுள்ள உறவு இந்த உலக ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வதிலும் ஆழமாக இருக்க வேண்டும். ஜெபம் செய்வது ஒரு கிரியை அல்ல. ஜெபம் செய்வது நாங்கள் தேவனோடு உறவாடும் வேளை. எனவே எந்த சூழ்நிலையிலும், தேவனுடைய சித்தம் எங்கள் வாழ்வில் நிறைவேறு ம்படி க்காய் ஜெபம் செய்வோம்.

ஜெபம்:

என்னை பெயர் சொல்லி அழைத்த தேவனே, உலக ஆசீர்வாத ங்களுக்காக ஜெபம் செய்யாமல், உம்முடைய சித்தம் இந்த பூமியிலே நிறைவேறும்படிக்காய் ஜெபம் செய்யத் துணை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:16