புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 24, 2019)

ஜெபத்தின் வல்லமை

அப்போஸ்தலர் 16:25

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டு க்கொண் டிருந்தார்கள்.


ரோமர் குடியேறின பிலிப்பி என்னும் பட்டணத்தில் பவுலும், சீலாவும் வந்து, சிலநாள் தங்கியிருந்த போது, அவர்கள் வழக்கமாய் ஜெபம் பண் ணுகிற இடத்திற்குப் போனார்கள். அங்கே குறிசொல்ல ஏவுகிற ஆவி யைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகு ந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். பவுல் அந்த அசுத்த ஆவியை நோக்கி: “நீ இவளை விட்டுப்புறப்படும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்று அந்த ஆவி யுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப் போயிற்று. அவளுடைய எஜ மான்கள் தங்கள் ஆதாயத்து நம்பி க்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலினதும், சீலாவினதும் வஸ்திரங் களை கிழித்து, அநேக அடிகள் அடி த்த பின்பு, சிறைச்சாலைக்காரன், அவர் களை சிறைச்சாலையிலே வைத்து, உட் காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட் டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவ னைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங் கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது. உடனே கதவு களெல் லாம் திறவுண்டது. எல்லாருடைய கட்டுக்களும் கழன்றுபோயிற்று. அந்த இடத்திலே பெரிதான விடுதலை உண்டாயிற்று. அந்த சிறைச்சாலை க்காரன் அவர்களை நோக்கி: இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய் யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகி றிஸ் துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படு வீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக் கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். அந்த சிறைச்சாலைக் காரனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். ஜெபத்தின் வல்லமையை சற்று சிந்தித்துப் பாருங்கள். உபத்திரவங்கள், அவமானங்கள், நிந்தைகள் மத்தியிலும், தங்களை அழைத்த தேவனுடைய சித்தம் நிறைவேறும்படியாய் மனநிறைவோடு பணி செய்தார்கள். நாங்களும் சூழ்நிலைகளைக் கண்டு மனம் சோர் ந்து போகாமல் ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்போம்.

ஜெபம்:

பரலோக தேவனே, எந்த சூழ்நிலைகளைக் கண்டும் மருண்டு போகாமல், பவுலையும், சீலாவையும் போல ஜெபத்திலே உறுதியாய் தரித்திருக்கும்படிக்கு தூய ஆவியினால் என்னை பெலப்படுத்தி நடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 26:41