புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 23, 2019)

தேவனிடத்திற்கு சேருங்கள்

யாக்கோபு 4:8

தேவனிடத்தில் சேருங் கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.


பரம பிதாவைவிட்டு தூரம் சென்றுவிட்டேன் என்று கூறும் போது, கெட்ட குமாரனுடைய சம்பவமே எங்கள் உள்ளத்திலே முதலாவதாக தோன்றும். தன்னுடைய தகப்பன் வீட்டைவிட்டு தன் உடமைகளோடு, தூர தேசத்திற்கு அவன் சென்றிருந்தான். அது போல, ஒருவேளை எங் கள் பிள்ளைகளோ அல்லது நாங்கள் அறிந்தவர்களின் பிள்ளைகளோ இப்படியாக துணிகரமான செயல்களை செய்திருக்கலாம் அல்லது செய்யலாம். சில வேளைகளிலே நாங்களும் அப்ப டியான நிலைக்குத் தள்ளப்படலாம். நானும் நீங்களும் இன்று பரம தந் தையோடு இருக்கின்றோம் என்றால் அது தேவனுடைய சுத்த கிருபை. தேவ னைவிட்டு தூரம் செல்வது என்று கூறும் போது, வெளிப்படையாக, மற்றவர்கள் யாவரும் காணக்கூடியதுமான, துன்மார்க்கமான வாழ் க்கை வாழ்வது மட்டுமல்ல. நாங்கள் நிற்க வேண்டிய நிலையைவிட்டு அகன்று போகும் போது நாங்கள் தேவனை விட்டு தூரம் செல்ல ஆரம்பிக்கின்றோம். கிறிஸ்துவிலே நிலைத்திருந்து கனி கொடுக்கும் படியாகவே நாங்கள் அழைக்கப்பட்டோம். எடுத்துக் காட்டாக, நாவி னாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. அப்படியாக தேவனை துதிக்கும் எங்களது நாவு, மற்றவர்களின் குறைகளை பேசித் திரியும் போது அங்கே சபித்தல் உண்டாகின்றது. அது ஒரு கிறிஸ்தவன் நிற்க வேண்டிய நிலை அல்ல. அப்படி செய்யும் போது அவன் தன் நிலையைவிட்டு அக ன்று போவதால், தேவனைவிட்டுத் தூரம் செல்ல ஆரம்பிக்கின்றான். பிரியமானவர்களே, இந்த வார்த்தை கள் கடுமையானதாக இருந்தாலும், உண்மையான வார்த்தைகள். எடுத்துக் கூறப்பட வேண்டிய வார்த்தைகள். தற்போது வெளி யரங்க மாக இருக்கும் மற்றவர்களுடைய குற்றங்களை நாங்கள் இன்று விம ர்சிக்கலாம். அப்படி செய்யும் போது நாங்கள் கிறிஸ்துவை சார்ந்தவ ர்கள் அல்ல என்பதை மற்றவர்களுக்கு வெளியரங்கமாக நிரூபித்து விடுகின்றோம். எங்கள் இருதயத்தை ஆராய்ந்தறிகின்ற தேவன் அங்கே என்ன இருக்கின்றது என்று அறிவார். தேவனுக்கு பிரியமில்லாத, அவ ரைவிட்டு தூரம் போகும் காரியங்கள் இருக்குமாயின் அவற்றை அறி க்கையிட்டு தேவனிடத்தில் சேருவோம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு என் இருதயத்தை ஒப்புக் கொடுக்காமல், உமக்கு பிரியமானதை செய்யும்படிக்கு எனக்கு கற்றுத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 5:11-19