புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 22, 2019)

தவறி விழும் வேளையில்

சங்கீதம் 94:18

என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும் போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங் குகிறது.


ஆரோக்கியமான சுக வாழ்வு வாழ்வதற்கு சுகாதாரம் அவசியம் என்று நாங்கள் கற்றிருக்கின்றோம். ஒருவன் தன் வாழ்வில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கத் தவறியதால் அவனுக்கு நோய் ஏற்பட்டுவிட்டது. தான் செய்த தவறினாலே இந்த நிலைக்குள்ளானேன் என்று உணர்ந்த அவன், இது என்னுடைய தவறு என்று வைத்தியரிடம் செல்லாமல் இருந்தால் அவனுடைய நிலைமை என் னவாகும்? அதே போல, இந்த பூமி யிலே உயிரோடு வாழும் நாட்களிலே, தேவனுக்கு பிரியமானதும் எங்கள் ஆத் துமாவிற்கும் ஆரோக்கியமானதுமான வாழ்க்கை வாழ்வதற்காக தேவ பிரமா ணங்கள் எங்களுக்கு கொடு க்கப்பட்டி ருக்கின்றது. தேவ பிரமாணம் ஒன்றை மீறி குற்றம் செய்த மனிதன், நான் தேவனுக்கு விரோதமாக குற்றம் செய் தேன். அவருக்கு பிரியமானதை நான் செய்ய தவறிவிட்டேன், இனி எப்படி தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்வது, என்று தன் உள் ளத்தில் கூறிக் கொண்டு, அவருடைய சமுகத்தைவிட்டு தன்னை தூர ப்படுத்திக் கொள்வானாகில், அந்தச் செய்கை, அவனுடைய வாழ்க்கை க்கு இன்னும் அதிக தீமையை உண்டு பண்ணும். பிரியமானவர்களே, பாவ நோயாலே எங்கள் ஆத்துமா வாடும் போது, பரமன் இயேசுவே எங்கள் பரம வைத்தியராக இருக்கின்றார். ஆத்துமாவிற்கு தேவை யான அருமருந்து அவரிடமே உண்டு. எனவே பெலவீனங்கள் தலை தூக்கும் போது அவரைவிட்டு தூரம் சென்று விடாதிருங்கள். தேவ னைவிட்டு தூரம் செல்கின்றேன் என்பதன் சில அறிகுறிகள். சபை கூடிவருதலை விட்டுவிடுதல், வேத வாசிப்பு, ஜெபம் செய்தல் போன் றவைகள் குறைவடைதல், விட்டு வந்த பழைய வாழ்க்கையின் நண் பர்களை நாடுதல். இவைகளை காணும்போது, தேவனை அண்டிச் சேருங்கள். வேதத்தை வாசியுங்கள். அவை ஜீவனுள்ளவைகள்! குரு டுபட்ட எங்கள் மனக்கண் களை பிரகாசமடையச் செய்து, சோர்ந்து போன ஆத்துமாவை உயிர்ப்பிக்க வல்லமையுள்ளது. இருதயத்தை தேவனிடம் ஒப்புக் கொடு ங்கள், தேவ ஆலோசனையை நாடுங்கள். பரிந்து பேசி ஜெபிக்கும் சகோதர சகோதரிகளிடம் விண்ணப்பத்தை தெரியப்படுத்துங்கள்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, என்னுடைய கால்கள் சறுக்கும் போது நீரே என்னை தாங்குகின்றீர் என்பதை உணர்ந்து எப்போதும் உம்மண்டை கிட்டிச் சேரும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 121:3