புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 21, 2019)

தேவனுக்குப் பிரியமானவைகள்

சங்கீதம் 40:8

என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்;


இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் என்பவர், தேவன் அழித்துப் போ டச் சொன்ன சாபத்தீடானவைகளை முற்றாக அழித்துப்போடாமல், தேவ கட்டளைகளை அற்பமாக மீறி சாபத்தீடானவைகளிலே கொழுமையா னவைகளை தேவனுக்கு பலியிடக் கொண்டு வந்தேன் என்று தீர்க்கத ரிசியாகிய சாமுவேலிடம் கூறினார். அதற்கு சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க் கிலும், சர்வாங்க தகனங்க ளும் பலிக ளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கு மோ? பலியைப்பார்க்கிலும் கீழ் ப்படித லும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்த மம் என்று கூறினார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் தேவ சமு கத்திலே ஆராய்ந்து பார்க்க வேண்டும். வீட்டிலும், சபையிலும், வெளி இடங்களிலும் நாங்கள் எங்கள் தேவனுக்கு ஆராதனைகளை செலுத்தி வருகின்றோம். எங்கள் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலி களை தேவனுக்கு செலுத்துகின்றோம். அழகான பாடல் வரிகளை, நேர் த்தியான இசையோடு பாடுகின்றோம். இவைகளை நாங்கள் நிறுத்தி விடாமல் இன்னும் உற்சாகமாகச் செய்ய வேண்டும். ஆனால் அந்த பலிகள் தேவனுக்கு உகந்த காணிக்கையாகவும், சுகந்த வாசனையா கவும் இருக்க வேண்டுமென்றால், தேவனுடைய வார்த்தைக்கு நாங் கள் செவிசாய்த்து, ஆர்வமுடன் அந்த வார்த்தையைக் கேட்டு, அதற் கமைய எங்கள் வாழ்வின் நடவடிக்கைகளில், நாங்கள் எங்களைத் தாழ்த்தி, கீழ்ப்படிய வேண்டும். தேவனுடைய நீதி நியாய ங்கள் எங் கள் வாயில் மாத்திரமல்ல, எங்கள் இருதயத்திலும் பதித்து வைக்கப் பட வேண்டும். அதாவது, தேவனுடைய பிரமாணங்களை அறிந்த நாங்கள், அவைகளை எங்கள் வாயினாலே மற்றவர்களுக்கு அறிவி த்து கூறுகின்றோம். மகா சபையிலும் சங்கத்திலும் அவருடைய மகத் துவத்தை பிரஸ்தாப்படுத்துகின்றோம். அவைகள் செய்யப்பட வேண் டியவைகளே. வாயினாலே கூறுவதுடன் நிறுத்தி விடாமல், தேவனு டைய பிரமாணங்களை எங்கள் இருதயத்திலே பதித்து வைத்து, அவைகளை எல்லா காவலோடும் காத்துக் கொண்டு, அந்த பிரமாண ங்களின்படி, தேவனுக்கு பிரியமானதை எங்கள் வாழ்வில் செய்ய வேண்டும். அப்பொழுது எங்கள் ஆராதனையில் தேவன் பிரியமுள் ளவராக இருப்பார்.

ஜெபம்:

அன்பான பிதாவே, உமக்கு பிரியாமான வாழ்க்கை வாழும்ப டியாக, உம்முடைய வசனத்திற்கு செவி கொடுத்து, என்னைத் தாழ்த்தி, கீழ்ப்படிந்து, உமக்கு பிரியமாக வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமு 15:18-23