புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 20, 2019)

தேவ நீதியை நிறைவேற்றுங்கள்

ரோமர் 2:7

சோர்ந்துபோகாமல் நற்கி ரியைகளைச் செய்து, மகி மையையும் கனத்தை யும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித் தியஜீவனை அளிப்பார்.


இன்றைய உலகிலே பல மட்டங்களிலே அதிகார து~;பிரயோகங்கள் நடப்பதை செய்திகள் வாயிலாக கேள்விப்படுகின்றோம். இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களிலே இருந்த மதத் தலைவர்களையும் அவர்களின் செய்கைகளையும் கண்டித்துப் பேசினார். வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;. ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும் படி அவர்கள் உங்களுக்குச் சொல் லுகிற யாவையும் கைக்கொண்டு செய் யுங்கள்; அவர்கள் செய்கையின்படி யோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லி யும் செய்யாதிருக்கிறார்கள். சுமப்பத ற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனு ~ர் தோள்களின்மேல் சுமத்துகிறார் கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். நீதி மானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்து க்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சக ரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்க ளின் இரத்தப்பழியெல்லாம் அவர்கள் மேல் இருக்கின்றது என இயேசு கூறினார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள், நற்செய்தியை அறி விப்பதன் நிமித்தம், இயேசுவின் திருப்பணியின் நாட்கள் தொடக்கம் இன்றுவரைக்கும் துன்பப்படுத்தப் படுகின்றார்கள். பொதுவான அதி கார து~;பிரயோகம் என்று கூறும் போது, நாங்கள் எங்கள் மேல் ஆளுகை செய்கின்றவர்களையே கண்டு கொள்கின்றோம். ஆனால், சில வேளைகளில் எங்களை நாங்கள் ஆராய்ந்து பார்க்கத் தவறி விடு கின்றோம். எங்கள் குடும்பத்தில், வேலையில், சபையில், சமுகத்தில் எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறிய அதிகாரத்தையும் நாங்கள் து~;பிரயோகம் செய்யலாகாது. தேவன் அவனவனுடைய கிரியைக ளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமை யையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்கா ரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்ப டிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். எனவே நாங் கள் தேவனுக்குப் பயந்து அவருடைய நீதியை நிறைவேற்றுவோம்.

ஜெபம்:

பரலோக தேவனே, எங்களைச் சூழ என்ன விதமான சம்பவங்கள் நடை பெற்றாலும், எனக்கு கொடுக்கப்பட்டவைகளிலே நான் உண்மை யுள்ளவனாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 23:1-4