புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 19, 2019)

தேவ சித்தம் நிறைவேறும்

அப்போஸ்தலர் 5:39

தேவனோடே போர்செய் கிறவர்களாய்க் காணப்ப டாதபடிக்குப் பாருங்கள் என்றான்.


ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களிலே, யூத மதத் தலைவர்கள் தங்க ளின் மனக்கடினத்தை உணராமல், தாங்கள் தங்கள் தேசத்திற்கும், மதத்திற்கும், ஜனங்களுக்கும், தங்களுக்கும் தொண்டு செய்கின்றோம் என்ற எண்ணத்துடன், இயேசுவின் சீஷர்கள் சிலரை ஒருமனப்பட்டு கொலை செய்தார்கள். அந்நாட்களிலே, இயேசுவின் சீஷர்கள், இயேசு வின் நாமத்தினாலே பல நன்மைகளை செய்து வந்தார்கள். அவர்கள் வழி யாக வியத்தகு அற்புதங்களை தேவன் நடப்பித்தார். அதைக் கண்ட யூத மதத் தலைவர்கள், பொறாமையினால் நிறைந்து, இயேசுவின் அப்போஸ்த லரை சிறையில் போட்டார்கள். அவர் களின் போதனையை நிறுத்தும்படிக்கு அவர்களை கொன்றுபோடும்படி வகை தேடினார்கள். அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாய சாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் மனிதன், சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக் குறி த்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவனும், கலிலேயனாகிய யூதாஸ் என்பவனும் தங்களுக் கென்று ஜனங்களை இழுத்தார்கள். ஆனால் இருவரும் மடிந்து அழி ந்து போனார்கள். அந்தப்படியே இந்த யோசனையும் இந்தக் கிரி யையும் மனு~ரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்: தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது. தேவ னோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என் றான். ஆம் பிரியமானவர்களே, நாங்களும் இந்த நாட்களிலே, உலக ளாவிய மட்டத்திலே, பல விதமான சம்பவங்களையும் உபதேசங்க ளையும் குறித்து கேள்விப்படுகின்றோம். அவை மனுஷ சித்தத்தினால் உண்டாயிருந்தால் அது நிலைநிற்காது. அவை யாவும் தேவனுடைய நியாயாசனத்திற்கு கொண்டு வரப்படும் நாள் உண்டு. எங்கள் குடும்ப த்தில் நாங்கள் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அநேகம் இரு க்கும் போது, வேறு இடங்களில் நடக்கும் பலவிதமான சம்பவங்களி னால் நாங்கள் சோர்ந்து போய்விடக்கூடாது. ஒரு வேளை எங்களை சூழ நடக்கும் சில காரியங்கள் தேவனால் உண்டாயிருந்தால், நாங்கள் அதற்கு எதிர்த்து நிற்க முடியாது. எனவே உற்சாகத்துடன் எங்கள் மத் தியிலே நாங்கள் செய்ய வேண்டியவைகளைச் செய்து முன்னேறுவோம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, உலகிலே நடக்கும் காரியங்கள் யாவையும் நீர் அறிந்திருக்கின்றீர், உம்முடைய சித்தம் இன்னதென்பதை அறிந்து கொள்ளும் ஞானமுள்ள உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:31