புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 17, 2019)

ஆவியிலே இசைந்திருப்போம்

லூக்கா 9:50

அதற்கு இயேசு: தடுக்க வேண்டாம்; நமக்கு விரோ தியாயிராதவன் நமது பட் சத்திலிருக்கிறான் என் றார்.


அந்நாட்களிலிருந்த யூத மதத் தலைவர்களில் பலர், இயேசு தங்களு டைய கொள்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் உடன்படாததால் அவரை விரோதித்தார்கள். தேவனுடைய சித்தம் என்ன என்பதையும், தங்கள் வழிகள் எப்படி இருக்கின்றது என்றும் ஆராய்ந்து பார்ப்பதற்கு பதி லாக “நாங்கள் தான் சரியானவர்கள்” என்ற எண்ணமுடையவர்களா யிருந்தார்கள். ஆனால் இயேசுவோ அவர்களுடைய தீமையான எண் ணத்திற்கு உடன்படவில்லை. ஒரு சம யம், கர்த்தருடைய சீ~னாகிய யோ வான் அவரை நோக்கி: ஐயரே, ஒரு வன் உம்முடைய நாமத்தினாலே பிசா சுகளைத் துரத்துகிறதை நாங்கள் க ண்டு, அவன் எங்களுடனேகூட உம் மைப் பின்பற்றாதவனானபடியால், அவ னைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோ தியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கி றான் என்றார். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு தேசத்;தில் இருக்கும் ஆவிக்குரிய சபை ஐக்கியம் ஒன்றிலே கூடி தேவனை ஆராதித்து வருகின்றீர்கள். அவ்வண்ணமாக நான் இன்னு மொரு தேசத்திலே குறிப்பிட்ட ஒரு ஆவிக்குரிய சபை ஐக்கியத்திலே தேவனை ஆராதித்து வருகின்றேன். நாங்கள் சரீரத்திலே பிரிந்திருந் தாலும், நாங்கள் பிரிவினையுடையவர்கள் அல்ல. அவரவர் வசிக்கும் இடத்தில் இயேசுவின் நாமத்தில் ஒன்றுகூடி பிதாவாகிய தேவனை ஆராதித்து வருகின்றோம். தூய ஆவியானவர் தாமே எங்களை வழி நடத்தி வருகின்றார். இப்படியாக பற்பல தேசங்களிலே, வேறுபட்ட மொழிகளிலே தேவனை ஆராதித்து வருகின்றார்கள். தேவனை ஆவி யோடும் உண்மையோடும் தொழுது கொள்கின்றவர்கள் எங்கிருந்தா லும் ஒரே ஆவியினாலே ஒன்றாய் இசைந்திருக்கின்றார்கள். எனவே எங் களோடு சேர்ந்து இயேசுவை பின்பற்றாதவர்களை நியாயந்தீர்க்கும் விடயத்திலே எச்சரிக்கையாயிருங்கள். இதனால் கசப்பான வேர் எங் கள் இருதயத்தில் சிறிதாகத் தோன்றி, பின்பு எங்கள் சமாதானத்தை முற் றாக கெடுத்துவிடும். மனிதர்கள் எங்களுடைய பட்சத்தில் இருப்பதல்ல, தேவன் எங்களுடைய பட்சத்திலே இருப்பதே தேவையானது. மனிதன் எங்கே இருக்கின்றான் என்றும் அவனுடைய நினைவுகள் இன்னதெ ன்றும் தேவன் அறிவார்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, நாங்கள் மட்டும்தான் சரியாக நடக்கின் றோம் என்ற எண்ணத்தை களைந்து விட்டு உம்முடைய சமுகத்திலே எங்களைத் தாழ்த்தி உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:2