புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 16, 2019)

அன்போடு கூடிய கிரியை

பிலிப்பியர் 1:17

சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.


“பக்கத்து வீட்;டிலே வசிப்பவன் தன் வீட்டை உடைத்து இன்னும் பெரி தாக கட்டியிருக்கின்றானே, அதனால் நாங்களும் அதற்கீடாக வீட்டை பெரிப்பிக்க வேண்டும்” அல்லது “அண்ணனுடைய பையன் நல்ல மாதிரி படித்து அதிக புள்ளிகளை பெற்றுக் கொள்கின்றானே, அதனால் எங்கள் பையனும் அப்படி படிக்க வேண்டும்” என்று சில மனிதர்கள் கூறுவதை கேள்விப்பட்டிரு க்கின்றோம். சில மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் கருப்பொருளை மற ந்து மற்றவர்களுக்காக தங்கள் வாழ் வை மாற்றி அமைத்து விடுகின்றா ர்கள். இந்த பூமியிலே நான் எதற்காக வாழுகின்றேன் என்பதை அறிந்து அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதே தேவையானது. நன்மை செய்வது நல் லது ஆனால் மற்றவன் செய்வதால் நான் செய்ய வேண்டும் என்று செய்யும் நன்மை எங்கள் உள்ளத்திலி ருந்து வரும் நன்மை அல்ல. சில வேளைகளிலே நாங்கள், எங்களை அறியாமலே போட்டி உணர்வோடு எங்கள் வாழ்க்கையை வாழ ஆர ம்பித்துவிடுகின்றோம். இந்த நிலைமை எங்கள் வீட்டில் மாத்திரமல்ல நாங்கள் வேலை பார்க்கும் இடம் மற்றும் சபை ஐக்கியங்களிலும் நுழைந்து விடுகின்றது. தேவ ஊழியராகிய பவுலின் நாட்களிலே, அவர் நற்செய்தியை அறிவித்ததின் நிமித்தமாக சிறையிலே போடப்ப ட்டார். அந்நாட்களிலே, சிலர் அவர்மேல் பொறாமை கொண்டதினால், விரோதத்தினாலே கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்கள். அவருக்கு நேர்ந்த துன்பத்தோடே இன்னுமாய் உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்த மனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவித்தா ர்கள். இருதயங்களை ஆராய்தறிக்கின்ற தேவன் எங்கள் இருதயத் தின் எண்ணங்களை அறிந்திருக்கின்றார். பிரியமானவர்களே, நாங்கள் மற்றவர்களுக்கு போட்டியாளர்கள் அல்ல. எங்களை முன்னறிந்து அழை த்த தேவன் எங்கள் வாழ்க்கையிலே ஒரு நோக்கத்தை வைத்திருக்கி ன்றார். எனவே தேவ சித்தம் எங்கள் வாழ்வில் நிறைவேறும்படிக்கா கவே நாங்கள் நல்மனதோடு பிரயாசப்படவேண்டும். வேறுபட்ட மன தோடு அல்ல அன்போடு கிறிஸ்துவின் நற்செய்தியை நாங்கள் அறி விக்க வேண்டும்.

ஜெபம்:

பரலோக தந்தையே, மற்றவர்களின் நிலைமையின்படி நான் செயற்படாமல், நீர் என்னை அழைத்த நோக்கம் என்னில் நிறைவேறும்படி நான் பிரயாசப்பட என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 4:15-16