புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 15, 2019)

இரக்கம் மேன்மை பாராட்டும்

யாக்கோபு 2:13

நியாயத்தீர்ப்புக்கு முன் பாக இரக்கம் மேன்மை பாராட்டும்


கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும் என்ற தேவனுடைய வார்த்தை உண்மையுள்ளது. அந்த வார்த்தை தேவன் குறித்த காலத்திலே நிறைவேறும். தற்காலத்திலே, நீங்கள் தேவனு டைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் ஒரு குற்றத்தை செய்து விட்டீ ர்கள் என வைத்துக் கொள்வோம். இது முதல் தடவையல்ல, இதற்கு முன்னதாக அதே குற்றத்தை ஐந்து தடவைகள் செய்து விட்டீர்கள் என கூறுவோம். அந்த வேளையிலே, உங் களுக்கு தேவ கோபாக்கினை வரவே ண்டும் என்று விரும்புவீர்களா? அல் லது தேவ கிருபை வேண்டும் என்று விரும்புவீர்களா? சற்று சிந்தித்துப் பாரு ங்கள்! நாங்கள் யாவரும் தேவ கிருபை அதிகதிகமாக எங்கள் வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்றே விரும்புவோம். எனவே நாங் கள் எங்களை எப்படி நேசிக்கின்றோமோ அதே போல பிறரையும் நேசிக்க வேண்டும். கிருபை பெருகும் என்று மனந்திரும்பாமல் பாவத்திலேயே ஜீவிப்பவர்கள், தேவனுடைய கிருபையை போக்கடி ப்பதால், குறித்த நாளிலே அவர்கள் தங்களுடைய பிரயாசத்தின் பின்விளைவை அறுப்பார்கள். ஆனால், அவர்கள் அப்படியாக அழி ந்து போவதை நாங்கள் விரும்பக் கூடாது. ஏனெனில், நீங்கள் மற்றவ ர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்ப டும் என்று இயேசு கூறியிருக்கின்றார். இரக்கஞ்செய்யாதவனுக்கு இர க்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன் னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று ஜெபிக்கும்படி கர்த்தர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கின்றார். ஒரு சமயம் இயேசுவின் பிரதான சீ~னாகிய பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந் தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரம் மாத்திரம் அல்ல, ஏழெழுபது தரம் மட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். அதாவது தாராள மனது டன் உன் சகோதரனுக்கு இரங்கும்படியாய் இயேசு கூறினார். நாங் கள் இரக்கம் பெறும்படி எங்கள் இரக்கத்தை தாராளமாய் அள்ளி வழ ங்குவோம்.

ஜெபம்:

இரக்கம் நிறைந்த தேவனே, எண்ணற்ற தடவைகள் எனக்கு நீர் இரக்கம் செய்து வருகின்றது போல, நானும் என் இரக்கத்தை மற்றவர்கள் மேல் காண்பிக்கும்படியாக என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:1-5