புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 13, 2019)

மனதுருக்கம் உடைய தேவன்

யோனா 3:10

தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.


ஒரு கால கட்டத்திலே, இஸ்ரவேல் ஜனங்கள் பல தசாப்தங்களாக தேவனைவிட்டு தூரமாய் வாழ்ந்து வந்தார்கள். தேவனுடைய சத்த த்தை கேட்டும் உணர்வில்லாதவர்களாய், அதை அசட்டை பண்ணி, அக் கிரமங்களை மிகுதியாய்ச் செய்தார்கள். தேவ வசனத்தை கொண்டு வந்த அவருடைய ஊழியர்களை கொலை செய்தார்கள். இப்படியாக அக்கிரமங்கள் நிறைவேறும் போது, எலியா எலி~h, மற்றும் ஏரே மியா, எசேக்கியேல் போன்ற தீர்க்கத ரிசிகளின் நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டது. இந்த தீர்க்கதரிசிகள் தேவன் உரைத்ததை அவர் உரைத்தபடியே கூறினார்களே தவிர, தங்கள் கோபத்தையும், உக் கிரத்தையும் வெளிக்காட்டவில்லை. ஜன ங்கள் அழிந்து போக வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த நியாயத்தீர்ப்பின் வழியாக ஜனங்கள் ஒரு வேளை உணர்வடைந்து தன்னிடம் திரும்புவார்கள் என்று தேவன் எதிர்பா ர்த்திருந்தார். நினிவே என்னும் பட்ட ணத்தின் அக்கிரமம் மிகுதியாகி அவை தேவ சமுகத்தில் வந்து எட் டிய போது, இன்னும் 40 நாட்களிலே நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று தேவ ஊழியராகிய யோனா வழியாக அவர்களுக்கு எச்சரிப்பு கொடு க்கப்பட்டது. அந்த பட்டணத்தின் ஜனங்கள் மனந்திரும்பியதால், தேவன் அவர்களுக்கு இரங்கி, வரவிருந்த அழிவை நீக்கிப்போட்டார். ஆனால், யோனாவிற்கு மனதிலே எரிச்சல் உண்டாகிற்று. அந்த பட்ட ணமானது தான் உரைத்தபடி அழிய வேண்டும் என்று எதிர்பார்த்திரு ந்தார். ஆனால், தேவனோ, தம்முடைய எச்சரிப்பின் வழியாக ஒரு வேளை ஜனங்கள் தங்கள் பாவத்தைவிட்டு திரும்புவார்கள் என்ற மனதுருக்கமுள்ள உள்ளம் உடையவராக இருந்தார். தேவனுடைய வார் த்தையை உரைக்கின்ற நாங்கள், தேவன் எவ்வளவு அன்புள்ளவர் என்பதை எங்கள் வாழ்க்கையின் சாட்சி வழியாக காண்பிக்க வேண் டும். அதாவது, குற்றம் செய்தவர்களின் தண்டனை உடனடியாக அவ ர்கள் மேல் வந்து அவர்கள் அழிந்து போகாமல், அவர்கள் உணர் வடைய வேண்டும் என்னும் மனநிலையோடே கிறிஸ்துவினுடைய நற்செய் தியை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

ஜெபம்:

மனதுருக்கமுடைய தேவனே, அன்போடு உம்முடைய வார்த் தைகளை மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கும்படிக்கு, உம்மைப் போன்ற உள்ளத்தை எனக்கு தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 34:6-7