புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 12, 2019)

இரட்சிப்படையும்படிக்கு...

லூக்கா 9:56

மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சி க்கிறதற்கே வந்தார் என்றார்


கர்த்தராகிய இயேசு இந்த பூமியில் தம்முடைய திருப்பணியை முடி த்து, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எரு சலேமு க்குப் போகத் தமது முகத்தைத்திருப்பி, தமக்கு முன்னாகத் தம்முடைய சீஷர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்த ப டியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சீஷரா கிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய் ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங் கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். இயேசு அவர் களை திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டினார். ஏனெனில் இயேசு இந்த உலகத்திலுள்ள மனி தர்களில் ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த பூமிக்கு வந்தார். அதற்காக தன் ஜீவ னையே கொடுத்தார். தம்மை சிலுவையில் அறைந்து, நகைத்து கேலி செய்தவர்களை கூட அவர் சபிக்கவில்லை. அவர்கள் அறியாமல் செய்கின்றார்கள் என்று அவர்களை மன்னிக்கும்படி பரம பிதாவிடம் வேண்டிக் கொண்டார். பிரியமானவர்களே, சில வேளைகளிலே சில மனிதர்கள் தேவனுடைய திருச்சித்தத்தை இன்னும் அறிய வேண்டிய படி அறியாதபடியினாலே, தங்களோடு ஒத்துவராதவர் களைப் பார் த்து, “நான் முழங்காலில் நின்றால் உனக்கு என்ன நடக்கும் தெரி யுமா” என்று திகிலடையச் செய்கின்றார்கள். நாங்கள் முழங்காலில் நின்று ஜெபிப்பது மற்றவர்களை சபிப்பதற்கும் அவர்கள் அழிந்து நரக ஆக்கினை அடைவதற்காகவும் அல்லவே. நாங்கள் வாழும் நாட் கள் நியாத்தீர்ப்பின் காலம் அல்ல. இது கிருபையின் நாட்கள். ஜீவ னை அழிக்கும்படிக்கு அல்ல, இரட்சிப்புக்கு வழிநடத்தும்படிக்கா கவே நாங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றோம். தேவனை இன்னும் அறி யாதவர்கள் அழிந்து போகாமல் எங்களோடு கூட நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்படிக்கே நாங்கள் பிரயாசப்படவேண்டும்.

ஜெபம்:

பரிசுத்த தேவனே, எத்தனையோ ஜனங்கள் உம்மை எதிர்த் திருந்தும் நீரோ அவர்கள் மனந்திரும்பும்படி பொறுமையாக இருப்பது போல நானும் பொறுமையாக இருக்க என்னை உணர்வுள்ளவனா (ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:16