புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 09, 2019)

பலவீன நேரங்களிலே...

எபிரெயர் 4:15

எல்லாவிதத்திலும் நம் மைப்போல் சோதிக்கப்ப ட்டும், பாவமில்லாதவரா யிருக்கிற பிரதான ஆசா ரியரே நமக்கிருக்கிறார்


பலவீனங்கள் தலை தூக்கும் போது, சோர்ந்து போய், தேவனை விட்டு இன்னுமாய் பின்வாங்கிப் போய்விடாதிருங்கள். தாவீது ராஜா தன்னுடைய வாழ்க்கையையும் தன்னுடைய பலவீனங்களையும், அதி லிருந்து தான் எப்படி விடுவிக்கப்பட்டது என்பதையும் வெளிப்படை யாக சங்கீதமாக பாடியிருக்கின்றார். “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம் பியிருக்கிற என் துருகமும், என் கேட கமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக் கிறார். துதிக்குப் பாத்திரராகிய கர் த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அத னால் என் சத்துருக்களுக்கு நீங்கலா க்கி இரட்சிக்கப்படுவேன். மரணக்கட்டு கள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப் படுத்தினது. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது. மரண க்கண்ணிகள் என்மேல் விழுந்தது. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.” இப்படியாக தாவீது ராஜா கர்த்தரைச் சார்ந்து இருந்தார். ஒரு பிள்ளையானவன் தன் நெருக்கத்தின் வேளையிலே எப்படியாக தான் நேசிக்கும் தன் னுடைய தந்தையை கிட்டிச் சேரும் பிள்ளையைப் போல, எங்கள் பரம தந்தையிடம் நாங்கள் கிட்டிச் சேரவேண்டும். தம்முடைய குமார னையே எங்களுக்காக கொடுத்தவர், அவர் இரக்கம் நிறைந்தவர். கர் த்தராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, சோதி க்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். நம்முடைய பலவீனங்களைக்குறி த்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் (இயேசு) நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவ ராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

ஜெபம்:

இரக்கம் நிறைந்த தேவனே, என்னுடைய பலவீன நேரங்களிலே, பாவம் செய்து நான் உம்மைவிட்டு இன்னமுமாய் தூரம் போகாதபடிக்கு உம்மிடமாய் என்னை இழுத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 12:9