புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 06, 2019)

எங்கள் சுபாவங்கள்

மத்தேயு 5:16

மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் வெ ளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.


ஆதி அப்போஸ்தலருடைய நாட்களிலே, யோப்பா என்னும் பட்டணத் தில்; தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சிஷ்ஷி நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டு வந்தாள். அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அப்பொழுது, அப்போஸ்த லனாகிய சீமோன் பேதுருவை வரும்படி அழைப்பித்தார்கள். பேதுரு அந்த இடத்தில் சேர்ந்த போது, அங் கிருந்த விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனே கூட இருக்கை யில் செய்திருந்த அங்கிகளையும் வஸ் திரங்களையும் காண்பித்து, அவரைச் சூழ்ந்து நின்றார்கள். பேதுரு எல்லா ரையும் வெளியே போகச்செய்து, முழ ங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேத த்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைக ளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்கள் முன் நிறுத் தினான். இந்த சம்பவத்திலே, தபீத்தாள் என்னும் ஸ்திரி அங்கிருந்த விதவைகளுக்கு, அவர்களின் தேவைகளை சந்திக்கும்படிக்கு தன் னால் இயலுமானதை செய்து வந்தாள். அந்த உதவி அவர்களுக்கு பெரும் ஆதரவாக இருந்தது. அதே நேரத்திலே உதவியைப் பெற்றவ ர்கள் அவளுக்கு நன்றியறிதலுள்ளவர்களாகவும் இருந்து வந்தார்கள். எல்லா நற்கிரியைகளும் தேவனிடத்திலிருந்து அனுக்கிரகம் செய்யப் படுகின்றது. நாங்கள் பெறும் ஞான நன்மைகளுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகின்ற அதேவேளையிலே, கருவியாக பயன்படுத்தப் பட்ட மனிதர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வ ண்ணமாக, தேவனுடைய நாமம் எங்கள் வழியாக, மனிதர்கள் மத்தி யிலே மகிமைப்படும்படி திக்கற்றவர்களுக்கும், விதவைகளுக்கும், உதவி செய்வதும், எங்களுக்கு உதவி செய்தவர்க ளுக்கு நன்றியறித லுள்ளவர்களாக இருப்பதும், எங்களுடைய சுபாவமாக மாற வேண் டும். பொருள் உதவி மாத்திரமல்ல, எங்கள் நன்றியுள்ள சுபா வமும் தேவனுடைய நாமத்திற்கு மகிமையை உண்டு பண்ணும்.

ஜெபம்:

மகிமை நிறைந்த தேவனே, மற்றவர்களிடம் உதவியை பெறும் போது, அதை அனுக்கிரகம் செய்த உமக்கும், அதை நிறைவேற்றியவர் களுக்கும் மனதார நன்றி கூறும் சுபாவத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 9:36-43