புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 04, 2019)

ஊழியராகிய பிலிப்பு

அப்போஸ்தலர் 8:4

சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.


அந்நாட்களிலே, உதவி ஊழியராக நியமிக்கப்பட்ட பிலிப்பு என்பவர் வழியாக தேவன் பெரிதான கிரியைகளை நடப்பித்து வந்தார். பிலி ப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு, கண்டு, அவ னால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள். அநே கரிலிருந்த அசுத்த ஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர் களை விட்டுப் புறப்பட்டது. அநேக திமிர்வாதக்காரரும் சப்பா ணிகளும் குணமாக்கப்பட்டார்கள். அந் தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனா ந்தரமார்க்கமாய்ப் போ என்றான். அந் தப்படி அவன் எழுந்து போனான். அப் பொழுது எத்தியோப்பியருடைய ராஜ ஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து. ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர் க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான். ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்; அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, வேத வாக்கி யங்களை அந்த மந்திரிக்கு விளக்கிக் கூறினார். இயேசுவைக்குறித்து மந்திரிக்கு பிரசங்கித்தான். அந்த மந்திரி இயேசுவின்மேல் விசுவாசம் கொண்டதால், தன்னை ஞானஸ்நானத்துக்கு ஒப்புக் கொடுத்தான். அவ ர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது கர்த்தருடைய ஆவியா னவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவ னைக் காணாமல், சந்தோ~த்தோடே தன் வழியே போனான். பிலி ப்பு என்பவரை ஆவியானவர் வேறு இடத்திற்கு கொண்டு போனார். அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிற வரையில் சகல பட்டணங்களிலும் சுவிசே~த்தைப் பிரசங்கித்துக் கொண்டு வந்தான். பிரியமானவர்களே, கர்த்தருடைய ஆவியானவரின் செயல்களை எவருமே மட்டுப்படுத்த முடியாது. நாங்கள் தேவ சித்தத்திற்கு எங்களை பூரணமாக ஒப்புக் கொடுக்கும் போது, அவர் அதிசயமான வழிகளை திறந்து தருவார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த உலகிலே என்னதான் நடந்தாலும் நான் உம்முடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 8:26-40