புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 02, 2019)

ஒரே சரீரம் பல அவயவங்கள்

1 கொரிந்தியர் 12:12

எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீ ரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது. அந்தப்பிர காரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.


ஆதி அப்போஸ்தலர்களின் ஊழிய நாட்களிலே, சீ~ர்கள் பெருகின போது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசா ரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, குறைவு உண் டாயிற்று. அப்பொழுது பன்னிரு அப்போஸ்தலரும் தங்களுக்கு கொடு க்கப்பட்ட வசனத்தைப் போதிக்கும் பணியைவிட்டு வேறு விடயங் களை செய்வது ஏற்புடையதல்ல என்று கூறி, உதவி ஊழியத்திற்காக பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த, நற் சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை இந்த வேலைக்காக நியமித்தார்கள். அதா வது, இந்த பந்தி விசாரிக்கும் ஊழி யம் தங்கள் தராதரத்திற்கு கீழானது என்று அவர்கள் தங்களுக்குள் பெரு மையடைந்து, தங்கள் நிலையை அவ ர்கள் உயர்த்தவில்லை. மாறாக கர்த்த ராகிய இயேசு தங்களுக்கு கொடுத்த திருப்பணி எதுவோ அதை தாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறு தியாக இருந்தார்கள். இவ்வண்ணமாக, அப்போஸ்தலர், ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திரு ந்தார்கள். அதுபோல விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனா கிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரை யும், தீமோனையும், பர்மெனாவையும், நிக்கொலாவையும் உதவி ஊழி யத்தை செய்து வரும்படி தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக்கி, அவரவர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை கருத்தோடு செய்து வந் தார்கள். தேவவசனம் விருத்தியடைந்தது, சீ~ருடைய தொகை எருச லேமில் மிகவும் பெருகிற்று. ஒரு சரீரத்திலே பல அவயவங்கள் வித் தியாசமான தொழிற்பாட்டோடு இருப்பது போல, கிறிஸ்துவின் சரீர மான சபையிலும், வரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கின்றது. முன் னறிந்து அழைத்த தேவன், தாயின் கருவிலே உருவாகும் முன்னே, தம்முடைய பணிக்காக எங்கள் ஒவ்வொருவரையும் வேறுபிரித்தெடுத் திருக்கின்றார். அடுத்த கட்டம் என்ன என்று எண்ணிக் கொள்ளாமல், நாங்கள் இப்போது பெற்ற பணியை நிறைவேற்றி தேவனுடைய பார்வையிலே உத்தம ஊழியர்களாக விளங்குவோம்.

ஜெபம்:

அழைத்த தேவனே, நான் உம்மிடத்தில் பெற்ற பணி உலக பார் வையிலே சிறிதானதாகவோ அல்லது பெரிதானதாகவோ இருந்தாலும் அதை மனதார நிறைவேற்றி முடிக்கும் மனப்பக்குவத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரேமியா 1:5