புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 01, 2019)

மகிமை நிறைந்த வரவேற்பு

மத்தேயு 25:34

வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.


நாட்டின் அதிகாரிகள், செல்வாக்குமிக்கவர்கள், கல்விமான்கள், விளை யாட்டு நட்சத்திரங்கள், மற்றும் பிரபல்யமானவர்கள் யாவரும் வைபவ ங்களிலே சிறப்பு விருந்தினராக, கௌரவமாக வரவேற்கப்படுகின்றா ர்கள். இவ்வண்ணமாக மனிதர்கள் தங்கள் கனத்தை விருந்திருன ருக்கு தெரியப்படுத்துகின்றார்கள். வரவேற்கப்படுகின்ற விருந்தினரும் அதனால் மனத்திருப்தி அடைகின்றார்கள். இவை யாவும் இந்த உலகத்திற்குரியவைகளும், மனிதர்களு டைய ஏற்பாடுமாயிருக்கின்றது. இதை சில மனிதர்கள் நாடித் தேடுகின்றா ர்கள். எப்போதும் கனம்பொருந்தியவர் களாக வாழ விரும்புகின்றார்கள். இவை இன்று தேவ ஜனங்கள் என்று அழை க்கப்படுகின்றவர்கள் மத்தியிலும் பரவ லாக காணப்படுகின்றது. அது மட்டு மல்லாமல், கனத்துக்குரியவர்கள் இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்லும் போ தும், பெரிதானதாயும் உலக மகிமை நிறைந்ததுமான பிரியாவிடையுடன் அவ ர்களின் இறுதிக் கிரியைகள் நடாத்தப்ப டுகின்றது. நாட்டிற்கு, மக்களுக்கு சேவை செய்தவர்களை கனப்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை. இவ்வண்ணமாக எங்களுக்கு கிடைக்கும் வரவேற்பில் நாங்கள் திருப் த்தியடைந்து விடக்கூடாது. ஒருநாள் நாங்கள் யாவரும் இக் கரையை நாங்கள் தாண்டி அக்கரைக்கு செல்லும் நேரம் வரும். அந்த வேளை யிலே எப்படிப்பட்ட கனம் இந்த உலகத்திலே கிடைக்கும் என்று தெரி யாது. பல தேவ பிள்ளைகள் இந்த உலகத்திலே பிறந்ததையும், வாழ் ந்ததையும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டதையும் நாங்கள் அறியாமல் இருக்கின்றோம். தேவனுடைய ஊழியர்களில் பலர், கடும் உபத்திரவ ங்கள் மத்தியிலே இரத்த சாட்சிகளாக மரித்து இக்கரையைவிட்டு சென் றிருக்கின்றார்கள். இந்த உலகின் மகிமையை அவர்கள் ஒரு பொரு ட்டாக எண்ணவில்லை. அந்த வான் கரையில், எங்கள் நேசர் இயேசு, எங் களை நோக்கி: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட வர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ண ப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்னும் வார் த்தையை கேட்பதே மகிமை நிறைந்த வரவேற்பாக இருக்கும்.

ஜெபம்:

மகிமை நிறைந்த தேவனே, இந்த உலகத்தின் மகிமையை நாடித் தேடாமல், அழியாத நித்திய மகிமையை நாடி, அந்நாளிலே அதை பெற்றுக் கொள்ளும்படி வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளிப்படுத்தல் 3:5