புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 29, 2019)

மன்னிக்கும் மனநிலை

மத்தேயு 7:3

நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப்பார்க்கிறதென்ன?


இரண்டு அயலவர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள முற்படும் போது, அந்த சிறு கிராமத்தில் வாழ்ந்து வந்த மனிதன் ஒருவன் அவர்களில் ஒருவனிடம், நீ மற்றவனின் குற்றத்தை தயவாய் மன்னித்துவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அப்பொழுது அந்த அயல்வாசி அந்த மனிதனைப் பார்த்து, நீ உன்னுடைய சகோதரன் செய்த குற்றத்தை பல வருடங்கள் மன்னியாதிருக்க எப்படி என்னை பார்த்து இன்னுமொருவனுடைய குற் றத்தை மன்னித்துவிடு என்று கேட்டுக் கொள்ள முடியும் என்றான். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங் கள். நாங்கள் மற்றவர்கள் ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழ வேண்டும் என்று ஜெபிப்பதற்கு முன் னதாக, எங்கள் இருதயத்தில் இருக்கும் கசப்புக்கள் யாவும் அகற்ற ப்பட வேண்டும். என் சகோதரன் ஒருவன் எனக்கெதிராக பேசியிரு க்கும் வார்த்தையை நான் மன்னித்துவிட மனதில்லாமல் இருக்கும் போது, நான் தேவனுடைய சமுகத்திற்கு சென்று, இன்னுமொருவனு டைய குற்றத்திற்காக எப்படி பரிந்து பேச முடியும்? முதலாவதாக, என் இருதயத்திலே கசப்புள்ள எண்ணமிருந்தால், நான் எனக்காக வேண்டுதல் செய்ய வேண்டும். இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன் எங்கள் மனநிலையை அறிந்திருக்கின்றார். எங்களை எதிர்த்து தகாத வார்த்தைகளை பேசிய மனிதன், ஒரு வேளை சமாதானத்திற்கு இணங்காதவனாகவும் எங்களோடு பேச மனதில்லாதவனுமாக இருக்க லாம். ஆனால் எங்கள் மனநிலை தேவனுக்கு முன்பாக ஏற்புடைய தாக இருக்க வேண்டும். நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரை யாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிரு ங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கட வது என்று பரிசுத்த வேதாகமம் எங்களுக்கு அறிவுரை கூறுகின்றது. “உன் கண்ணி லிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்” என்று கர்த்தராகிய இயேசு சொன்னது போல, நாங்கள் எங்கள் நிலையை சரிபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

நீதியின் தேவனே, என் உள்ளத்தின் நினைவுகளை அறிந்திருக் கின்றீர், உமக்கு முன்பாக உண்மையுள்ள இருதயத்தோடு நான் வாழும்படிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:32