புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 27, 2019)

உயர்ந்த அடைக்கலம்

சங்கீதம் 46:7

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.


விஞ்ஞான தொழில்நுட்பமானது என்றுமில்லாத அளவு வளர்ச்சி கண்டிரு க்கின்றது என்பதை நாங்கள் காண்கின்றோம். நாட்டுக்கு நாடு தங்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பல சாதனங்களை உண்டு பண்ணி, விண் வெளிக்கு ஓடங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வண் ணமாகவே மனிதர்களும் தங்கள் கிரியைகளைக் குறித்து மேன்மையடைகின்றார்கள். உலக ஐசுவரியம் நிறை ந்தவர்களும், பெரும் அதிகாரத்திலுள்ள வர்களும் தங்கள் மாளிகைகளை பாது காப்பு வலையமாக மாற்றிக் கொள்கின்றார்கள். வல்லரசு நாடுகளிலும், தங்கள் நாட்டின் இரகசியங்கள் ஒன்றுமே வெளியில் செல்லாதபடிக்கு பெரும் பாதுகாப்பான கட்டிடங்களை அமைத்து, தொழில்நுட்பத்தால் அதை பாதுகாத்துக் கொள்கின்றார்கள். இப்படியாக மனி தன் எந்த காரியத்தை குறித்து, மேன்மை பாராட்டினாலும், ஒரு சில வினாடிகளுக்கு ஏற்படும் பூமியதிர்ச்சி, அவன் அமைத்தவைகளை இரு ந்த இடம் தெரியாமல், பூமி அவைகளை உள்வாங்கிக் கொள்கின்றது. பூமியின் சிறிய அசைவுக்கு முன்பாக ஒருவரும் நிற்கமுடியாது. ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.) ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத் தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசை யாது. அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார். ஜாதி கள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது. அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடை க்கலமானவர். (சேலா.) ஆம் பிரியமானவர்களே, நாம் வாழும் இந்த பூமி தேவனுடைய கிருபையால் நிலைநிற்கின்றது. மனிதர்கள் தேவ கிரு பையை மறந்து தங்கள் ஆக்கங்களில் பெருமிதமடையலாம் ஆனால், நாங்களோ உயர்ந்த அடைக்கலத்தில் எங்களை வைத்தவரை நோக்கிப் பார்ப்போம்.

ஜெபம்:

ஆபத்து நாளில் அடைலக்கமான தேவனே, என் செய்கைகளி னால் நான் பெருமிதமடைந்து உம்முடைய நீடிய பொறுமையை அசட்டை செய்யாதபடி வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருளும் இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 121:1-6