புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 25, 2019)

தாங்கி நடத்துங்கள்

1 தெச 5:14

ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத் திலும் நீடிய சாந்தமாயி ருங்கள்.


பெலவீனர் என்று தேவன்தாமே எங்களை தள்ளிவிடாமல் தம்முடைய கிருபையினாலே எங்களை தாங்கி நடத்தி வருகின்றார். அவர் நம் முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரியதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ் வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; எங்கள் பெலத்திற்கு மேலாக நாங்கள் சோதிக் கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்கி வருகின்றார். சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். மேற்கூறியவைகள் யாவையும் நாங்கள் யாவரும் தேவனிடம் அனு தினம் பெற்றுக் கொள்கின்றோம். எனவே மற்றவர்களுடைய பெலவீன நேரங்களிலே தேவன் எங்கள் மேல் காட்டிய இரக்கத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டும். பாவம் செய்து ஒடுங்கிப் போயிருக் கின்றவர்களை இன்னும் பாவம் செய்யும்படியாக அவர்கள்; பெலனற் றுக் போகும்படியாய் நாங்கள நடந்து கொள்ளக்கூடாது. ஒருவன் ஒரு காரியத்தில் பெலவீனமாக இருக்கின்றான் என்று அறிந்தால் அந்த பெலவீனத்தினால் அவன் இன்னும் அதிக பாவம் செய்யும்படியாய் நாங்கள் அவர்களை பாவ சோதனைக்குள் தள்ளிவிடக்கூடாது. ஒரு மனிதன் கவலையீனமாக விபத்தொன்றில் அகப்பட்டு காயப்பட்டிருக்கும் போது, அவன் புண்களுக்கு வைத்தியம் செய்யாமல், இன்னும் அதிகதிமாக அந்த புண்களின் நோவு பெருகும்படி அதில் அடிப்பது சரியாகுமா? இல்லை. பிரியமானவர்களே, பலவீனரைத் இன்னுமாய் தாக்காமல் உங்களால் முடிந்த அளவு தாங்குங்கள். அவர்கள் விடுத லைக்காக ஊக்கத்தோடு ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, என்னுடைய பலவீன நேரங்களிலே என்னை நீர் தாங்கி நடத்துவது போல, நானும் மற்றவர்களின் பலவீன நேரங்களில் அவர்களுக்கு உதவி செய்யும் உள்ளத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 10:13