புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 24, 2019)

மருண்டுபோகாதிருங்கள்

பிலிப்பியர் 1:27

எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்கு றித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்து கொள்ளுங்கள்.


வானாந்திர வழி இலகுவான பிரயாணம் அல்ல. காலநிலைகளினாலும், மிருகங்கள் மற்றும் ஊரும் பிராணிகளாலும், கள்வர்களாலும் வரும் மோசங்கள் அநேகம். இவ்வண்ணமாகவே இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து, வாக்களிக்கப்பட்ட செழிப்புள்ள கானான் தேசத்திற்கு வழிநடத்திச் செல்லப்பட்டார்கள். சில நாட்க ளிலே எல்லாமே அவர்களுக்கு எதிராக தோன்றிற்று, பலர் விரக்தியடைந்து தங்களை வழிநடத்திச் செல்ல ஏற்படுத்தப்பட்ட தலைவனை (மோசே) கல்லெறிந்து கொல்லும்படிக்கு முனைந்தார்கள். ஏனெனில் தேவனின் வாக்குத்தத்தத்தை குறித்த நம்பிக்கை அவர் கள் இருதயத்தில் இருக்காதபடியால், அவர்களை சூழ்ந்து நெருக்கும் பயங்கரங்களை கண்டு மருண்டு போனார்கள். இதற்கொத்ததாகவே, நாங்க ளும் வாக்களிக்கப்பட்ட பரம கானானாகிய பரலோகத்தை நோக்கி பயணம் செய்கின்றோம். இந்த பிரயாணத்தின் வழியில் (எங்கள் வாழ்க்கையில்) பல சவால்கள் உண்டு. சில வேளைகளிலே இந்த சவால்கள் நாங்கள் நம்பியிருந்த மனிதர்களாலே ஏற்படலாம். அவைகள் மேல் எங்கள் கண்களை வைத்து, எங்கள் இலக்கை மறந்து விட வேண்டும் என்பதே பிசாசானவனின் திட்டம். நீங்களோ அவைகளினாலே மருண்டுபோகாதிருங்கள். நாங்கள் ஏன் விசேஷித்தவர்களா யிருக்கின்றோம்? இந்த பிரயாணத்திலே அன்பின் தேவன் எங்களோடு இருப்பதினால் நாங்கள் பெரும் பாக்கியம் பெற்ற ஜனங்கள். நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடுங்கள். இந்த போராட்டத்தின் ஆயுதங்கள் இந்த உலகத்திற்குரிய வாதங்களும் கலகங்களும் அல்ல. எங்கள் போராயுதங்கள் ஆவியின் வல்லமை. எனவே மாம்சத்தில் போர் செய்கின்றவர்களாக இல்லாதபடிக்கு நாங்கள் எச்சரி க்கையாக இருக்க வேண்டும். சில வேளைகளிலே அவர் மௌனமாக இருக்கின்றார் என்று நாங்கள் எண்ணலாம், அந்த எண்ணம் எங்க ளுடைய பெலவீனம்.அவர்; எங்களோடு இருப்பது எங்கள் பெலன்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த உலகத்தினால் உண் டாகும் பயங்கரங்களை கண்டு நான் மாம்சத்தில் போர் செய்யாதபடி உம்மை நோக்கி பார்க்க என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 7:6