புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 23, 2019)

மேன்மையான அழைப்பு

வெளி 1:6

நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


உலக பிரசித்தி பெற்ற விளையாட்டு அணி ஒன்றில், உங்களில் ஒருவர் அல்லது உங்கள் பிள்ளைகளில் ஒருவர் அங்கத்தவராக இருந்தால் எவ்வளவாக சந்தோஷமடைவீர்கள்? இந்த காலகட்டத்திலே கல்விமானாக இருப்பதைவிட மனிதர்கள் பிரபல்யமான விளையாட்டு வீரனாக இருக்க விரும்புகின்றார்கள். தங்களுக்கு தூரத்திலே அறி முகமானவர் ஒருவர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் இருந்தால், அதை மனிதர்கள் மத்தியிலே எந்த சலனமுமின்றி மிகவும் பெருமிதமாக பேசிக் கொள்வார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே, தம்முடைய திரு ப்பணிக்காக பன்னிருவரை தெரிவு செய் தார். அந்நாட்களிலே, மேன்மையான குடிமக்கள் இருந்தார்கள், பெரும் கல் விமான்கள் இருந்தார்கள், பராக்கிரம முள்ள படைத் தளபதிகள் இருந்தார் கள், பெரும் அதிகாரிகள் இருந்தார் கள், விளையாட்டு வீரர்கள் இருந்தார் கள், மதங்களைச் சார்ந்த தலைவர்கள் இருந்தார்கள் ஆனாலும் தம்முடைய அழியாத ராஜ்யத்தின் திருப்பணியை நிறைவேற்றும்படி தமக்கென எளிமை யானவர்களை தெரிந்து கொண்டார். எவ்வளவு ஆனந்த பாக்கியம் அது! முடிவில்லாத ராஜ்யத்தின் வேலைக்காக சர்வ வல்லமை படைத்த தேவனால் வேறுபிரிக்கப்பட்டார்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். அநேகமாயிரம் மனிதர்கள் மத்தியிலே, இன்று எங்களையும் அந்த ராஜ்யத்தில் ஆசாரியர்களாகவும், ராஜாக்களாகவும் தமக்கென வேறுபி ரித்திருக்கின்றார். ராஜரீகமாக பலிகளை செலுத்தும்படிக்கு. தம்மு டைய சாயலை தரிக்கும்படிக்கு, இரட்சிப்பின் நற்சாட்சியாக இந்த உலகத்திலே திகழும்படிக்கு எங்களை வேறு பிரித்திருக்கின்றார். முடிவிலே தம்முடைய நித்திய ராஜ்யத்திலே நீடுழியாய் வாழும் பாக்கியத்தை தந்தருள்வார்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய நித்திய ராஜ்யத்தின் பணிக்காக உலகத்திலே நற்சாட்சியாக விளங்கும்படிக்கு நீர் என்னை அழைத்தீர், அந்த அழைப்பை உணர்ந்து வாழ கிருபை செய்யும் இரட்சகர் இயேசு வழியாக ஜெபி க்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 13:43