புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 22, 2019)

ஏழைகளை நினைவு கூருங்கள்

சங்கீதம் 41:1

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்


“இந்த ஏழை என்னையும் நினைந்தருளும்” என்று நாங்கள் தேவனை நோக்கி ஜெபிப்பதுண்டு. தாவீது ராஜாவும் “இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலா க்கி இரட்சித்தார்” என்று கூறினார். நாங்கள் சற்று தரித்திருந்து சிந்தனை செய்து பார்ப்போமென்றால், எங்களை சூழ வாழும் ஏழைகள் பலர் எங்களை நோக்கி கூப்பிடுவதின் சத்தத்தைக் கேட்கலாம். சில வேளைகளிலே நாங்கள் எங்கள் நிலையைக்கு றித்து அதிகமாக அலட்டிக் கொள்வ தால், தேவன் எங்களுக்கு அருளின ஆசீர்வாதங்களை உணர்ந்து கொள்ளா மல் இருக்கின்றோம். எப்போதும் தேவனிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையே நம்மிடம் இருப்பதால், எங்கள் நிலையைவிட அவலநி லையில் இருக்கும் வறியவர்களின் கூக்குரலை கேட்க முடியாதபடிக்கு எங்கள் செவிகள் மந்தமாக போய்விடுகின்றது. எப்போதும் நாங்கள் இந்த உலக அளவுகோலின்படி முன்னேற்றம் அடைய வேண்டும் என்றிருப்பதால், தேவன் எங்கள் ஆத்துமாவிற்கு செய்த எண்ணற்ற நன்மைகளை கூடிய சீக்கிரத்தில் மறந்து போய் விடுகின்றோம். வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்ற வார்த்தைக்கமைய எங்களால் முடிந்த அளவிற்கு திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்க வேண்டும். அப்போஸ்தலராகிய பவுல் உரைத்தபடி, மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன். எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிற பிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறு மைக்கு உதவுவ வேண்டும். சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்;. பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்;.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, எப்போதும் என்னைக் குறித்த சிந்தையோடு இருக்காமல், சிறுமைப்பட்டவர்களை நினைவு கூர்ந்து அவர்களை விசாரிக்கும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 8:13-15