புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 18, 2019)

ஏக்கமும் தவிப்பும்

சங்கீதம் 38:9

ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.


என்னுடைய நிலையை யார் அறிவார்? அதை விளக்கிக் கூறுவது எப்படி எனத் தெரியவில்லை? என்ற நிலைக்கு பலர் தள்ளப்படுவ துண்டு. தாவீது ராஜாவும் தன் இக்கட்டின் நாளிலே தேவனை நோக்கி இவ்வண்ணமாக பாடினார். “நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். என் குடல்கள் எரிபந்தமாய் எரி கிறது. என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை. நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இரு தயத்தின் கொந்தளிப்பினால் கதறுகி றேன். ஆண்டவரே, என் ஏக்கமெல் லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்க வில்லை. என் உள்ளம் குழம்பி அலை கிறது. என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று. என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதை யைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார் கள். என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவை களைப்பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.” சில வேளைகளிலே எங்களுடைய சூழ்நிலையை நாங்கள் கூட முற்றும் முழுமையாக அறிய முடியாதபடி காரிருள் எங்கள் வாழ்வை மூடிக் கொள்கின்றது. சிலர் பாவம் செய்ததினால் படுகுழயில் தள்ளப்பட்டது போன்ற வேதனையில் தவிக்கின்றார்கள். இன்னும் சிலர் எனக்கு ஏன் இப்படி நடந்தது என்று அறியாதிருக்கின்றார்கள். நாளை என்ன நடக்கும் என்று தெரியாமல் இதயம் கலங்குகின்ற நேரம் உண்டு. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக என்று கூறிய இயேசு இரக்க த்தில் ஐசுவரியமுள்ளவர். உங்கள் நிலையை நன்றாய் அறிந்திருக்கின்றார். உங்கள் உள்ளத்தின் ஏக்கம் தவிப்பு எல்லாவற்றையும் அவரி டம் தெரியப் படுத்துங்கள். உங்கள் வாழ்வை முற்றுமுழுவதுமாக அவரிடம் ஒப்புக் கொடுங்கள். உங்கள் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருங்கள். அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உங்கள் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உங்கள் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, என்னுடைய இக்கட்டு நாளில் அடைக்கலமானவரே, என்னுடைய ஏக்கம் தவிப்பு எல்லாம் அறிந்தவரே. உம்மை நம்பியிருக்கின்றேன், எனக்கு சகாயம் செய்ய தீவிரியும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28