புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 17, 2019)

பெரியவர் எங்களோடு

1 யோவான் 4:4

பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத் திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.


யாவும் சிறப்பாக சென்றுகொண்டிருந்த குடும்பம் ஒன்றில், திடீரென பல சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை உண்டாயிற்று. குறைவுகள் ஏற்படத் தொடங்கியதால் ஆங்காங்கே முறுமுறுப்பு ஆரம் பமாகிவிட்டது. ஒரு நாள் தந்தையார் குடும்பதிலுள்ள யாவரையும் அழைத்து அவர்களோடு பேசினார். இது எங்கள் குடும்பம். குடும்பத்திலுள்ள குறைகளை யாவரும் அறிந்திருக்கின்றீர்கள். எங்கள் குடும்பம் மறுபடியும் மறுமலர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணம் எங்கள் யாவரிடமும் உண்டு. அதற்காக நாங்கள் யாவரும் கர்த்தரை நோக்கி விண்ணப்பிக்கின்றோம். ஆனால், “குறைவுகளை நிறைவாக்கும்படி நான் என்ன செய்யப் போகின்றேன்”? என்று நாங் கள் ஒவ்வொருவரும் எங்களை கேட் டுக் கொள்ள வேண்டும். நாங்கள் மறு படியும் நல்ல நிலைக்கு திரும்ப வேண் டும் என்ற பொதுவான நோக்கத்தின் கீழ் எங்கள் பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். பிரியமானவர்களே, இன்று வீட்டிலும், சபை ஐக்கியத்திலும் நிறைவு ஏற்படும்படி நாங்கள் எண்ணமுள்ளவர்களாக இருக்கின்றோம். அந்த எண்ணம் நல்லது. இருக்கும் குறைவுகளை நாங்கள் அறிந்திருக்கின்றோம். அவை நிறைவாகும்படி தேவனை வேண்டிக் கொள்கின்றோம். அந்த நிறைவு உண்டாகும்படிக்கு என்னுடைய பங்களிப்பு என்ன? எங்களுடைய பெலன் குறுகியதாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இருக்கும் பெலத்தோடு, தேவனை நம்பி நாங்கள் நற்கிரியைகளை செய்;யும் போது தேவ ஆவியானவர் தாமே பெரிதான விளைச்சலை உண்டு பண்ணுவார். மீதியானியரின் கொடுமையிலிருந்து இஸ்ரவேலை விடு விக்கும்படி கிதியோன் என்னும் மனிதனை கர்த்தர் அழைத்தபோது, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப் பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். எனவே, பெரியவர் எங்ளோடு இருக்கும் போது, கலங்காமல் முன்னேறிச் செல்லுவோம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ளவரே, குறைவுகளைக் கண்டு சோர்ந்து போகாதபடிக்கு, எனக்கு இருக்கும் பெலத்தின்படி நிறைவை நோக்கி முன்னேற என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நியா 6:16