புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 16, 2019)

இருதயத்தின் அந்தரங்கங்கள்

சங்கீதம் 44:21

இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே.


ஒரு காரியாலயத்திலே வேலை பார்த்து வந்த மேற்;பார்வையாளர், தன்னுடைய வேலை சரிவர செய்து முடிக்க தடையாக இருக்கும் காரணிகள் என்ன என்பதையும், அதை எப்படி மாற்றியமைக்க முடி யும் என்பதையும் பணிவாக தன் முகாமையாளரிடம் எடுத்துக் கூறினார். அந்த மேற்பார்வையாளர் கூறியவற்றை நல் மனதுடன் ஏற்றுக் கொள் வதுபோல அந்த முகாமையாளர் காண ப்பட்டார். ஆனால் மனதின் ஆழத்தில் “இவைகளை எனக்கு சொல்வதற்கு இவர் யார்?” என்ற எரிச்சல் ஏற்பட் டது. அதனால், அந்த மேற்பார்வையா ளரை வேலை நீக்கம் செய்வதற்கு சந் தர்ப்பத்தை மிகவும் கவனமாக எதிர் பார்த்திருந்தார். மனிதர்கள் தங்கள் உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொ ண்டு, வெளியிலே வேறொன்றை காண்பிக்கக்கூடிய ஆற்றல் உடை யவர்கள். தங்கள் உள்ளத்திலிருக்கும் அநியாயங்களை வெளிக்காட் டாமல், தங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் படி மறைவாகவும் சமார் த்தியமாகவும் தந்திரங்களை செய்யும் மனிதர்களின் அந்த சுபாவ த்தை, இந்த உலகிலே செயற்திறன் என்று அழைக்கப்படலாம். இப்படி ப்பட்ட நிகழ்வுகள் பல மட்டங்களில், ஏறத்தாழ எல்லா உலக அமைப் புக்களிலும் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் இருதயத்தை ஆரா ய்ந்தறிக்கின்ற தேவன் மனிதனின் உள்ளத்தில் என்ன இருக்கின்றதெ ன்பதை ஆராய்ந்து அறிகின்றார். காயீனும் ஆபேலும் தேவனுக்கு பலி செலுத்தினார்கள். ஆபேலின் பலி தேவனுக்கு ஏற்புடையதாக இருந்தது என்று அவன் சகோதரனாகிய காயீன் அறிந்த போது அவனுக்கு எரிச்சல் உண்டாயிற்று. அவனுடைய மனநிலை மாற்றம டைந்ததை அவன் சகோதரனாகிய ஆபேல் அறியாதிருந்திருக்கலாம். ஆனால் இருதயத்தை ஆராய்ந்தறிகின்ற தேவன் அவன் உள்ளத்திலி ருந்த எரிச்சலையும் அதனால் வரப்போகும் விளைவையும் அறிந்திரு ந்தபடியால் அதை அவனுக்கு வெளிப்படுத்தினார். ஆனால் அவனோ தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தன் சகோதரனை கொன்று போட்டான். இந்த உலகிலே மனிதர்கள், வெளி தோற்றத்தை அல்லது உலக அந்தஸ்த்தை பார்த்து பலவிதமாக உங்களை தரப்படுத்தலாம் ஆனால் இருதயங்களை ஆராய்ந்தறிகின்றவர் நாங்கள் யார் என் பதை அறிந்திருக்கின்றார். ஆகவே எங்கள் உள்ளத்தின் நினைவுகள் தேவனுக்கு ஏற்புடையதாக இருப்பதாக.

ஜெபம்:

நீதியின் தேவனே, என் இருதயத்தின் எண்ணங்கள் எல்லாம் உம்முடைய சமுகத்திலே ஏற்புடையதாக இருக்கும்படிக்கு, உண்மையுள்ள வாழ்க்கை வாழும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 139:23-24